ரூ. 4.80 கோடி மதிப்பிலான தானப் பத்திரம் மீட்டு தந்த ஆர். டி.ஓ !
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பெற்றோரிடம் ரூ. 4.80 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக பெற்று அவர்களை பராமரிக்காத மகன்களிடம் இருந்து சொத்துக்களை திரும்ப பெறுவதற்காக பத்திரப்பதிவை ரத்து செய்ய உத்தமபாளையம் ஆர். டி.ஓ. செய்யது முகமது உத்தரவிட்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா. ஓடைப்பட்டி டவுன் நந்தவனத் தெருவைச் சார்ந்த கலைமணி இவரது மனைவி லோகமணி.
தேனி மாவட்ட ஆட்சிரியரிடம் தன்னை பராமரிக்காமல் பிள்ளைகள் தவிக்கவிட்டதாகவும் தன் பெயரில் உள்ள ரூ. 4.80 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக எழுதி வாங்கிக் கொண்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பரிந்துரை செய்தார்.
அப்போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையதுமுகமது, முழுமையாக 6 மகன்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது பெற்ற தாயை கவனிக்காமல் விட்ட பிள்ளைகளிடம் எடுத்துக் கூறி தானப் பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
தானப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது மனிதாபிமானத்தீர்ப்பு என்று தாய் கண்ணீர் மல்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் புகழ் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
— ஜெய்ஸ்ரீராம்