பள்ளியில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ! வன்கொடுமை வழக்கு பதிய கோரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம் பெரியகுளம் அனுமார் கோவில் தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மு.குணமுத்து . அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றார். இவரது 6 வயது மகளை இவரது வீட்டின் அருகே உள்ள மதுரை ரோட்டில் பங்களாப்பட்டி பிரிவு அருகில் உள்ள விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில்  கடந்த 10.6.2025ம்  தேதி  பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய திறனறித் தேர்வின் மூலமாக தேர்வு செய்து  ஒன்றாம் வகுப்பில் பள்ளி கட்டணம் ரூபாய்  13500 செலுத்தி பள்ளியில் சேர்த்துள்ளார்.

பள்ளியில் சேர்த்த முதல் நாளே குணமுத்து-வின் மகளை பள்ளியில் வகுப்பறையில்  தனியாக உட்கார வைத்திருந்து உள்ளனர் . இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் குணமுத்து கேட்ட பொழுது  முறையாக பதில் ஏதும் சொல்லாமல் சிறப்பு வகுப்பு நடத்தினோம் என்று சொல்லி சமாளித்து விட்டுள்ளனர் .

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மறுபடியும் இரண்டாம் நாள் மட்டும் மூன்றாம் நாள் என தொடர்ந்து தனிமையில் உட்கார வைத்துள்ளனர் . இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம்  சிறுமியின் தந்தை குணமுத்து கேட்ட பொழுது   குணா முத்துவை பள்ளிக்கு வரவழைத்து  அவர் குழந்தைக்கு கட்டிய கல்வி கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தில் வேலை செய்யும் மீனா என்பவர் குணாமுத்து விடம் திருப்பிக் கொடுத்து  உங்களது குழந்தையை வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும்

மேலும் குழந்தையை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது . இந்த தகவல் அன்று அனைத்து முன்னணி செய்தி சேனல்களில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டு தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பள்ளி கல்வித்துறையின் சார்பில் மேற்படி பள்ளியில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குணமுத்து பள்ளி நிர்வாகத்திடம் தலைமை ஆசிரியரிடம் பேச வேண்டும் என கேட்டு அவரை சந்தித்துள்ளார் . அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார்  பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குணமுத்து   என்பவரின் ஜாதி பெயரைச் சொல்லி தரகுறைவான வார்த்தைகளால் பேசி  மிரட்டி பள்ளியை விட்டு வெளியில் துரத்தி இது போன்ற வருவோரை பள்ளிக்குள் அனுமதிக்காதீர்கள் என பள்ளி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் குணமுத்துவின்  சமூகத்தை சேர்ந்த ஏராளமானோரை நான்தான் படிக்க வைத்துள்ளேன் . உங்க ஆளுங்களுக்கு நல்லது எதுவும் செய்யக் கூடாது டா  என  ஒருமையில் பேசி மிரட்டி உள்ளார் .

இது குறித்து குணமுத்து கடந்த  ஜூலை 07ம் தேதி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில்  விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார்  மற்றும் மீனா, முதலாம் வகுப்பு ஆசிரியர் என அனைவரும் மீதும்  தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி  புகார் மனு செய்திருந்துள்ளார். இந்தப் புகார் மனுவினை  காவல் ஆய்வாளர் கீதா அவர்கள் ஜூலை 29ம் தேதி பார்வையிட்டு  பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது  தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

பெரியகுளம் காவல் துறையினர் சாதாரண வழக்கு குறித்த தகவலை கூட ஊடகம் மற்றும் செய்தித்தாள் நிருபர்களிடம் கொடுத்து அதனை பெரிதாக்கும். ஆனால் 6 வயது குழந்தையிடம் சாதி வெறியுடன் நடந்து கொண்ட நபர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் அதனை  வெளியில் தெரியாதவாறு வழக்கமாக செய்யும் ஊடக செய்தி நிறுவனங்களுக்கான தகவலை கூட வழங்காமல்   ஜாதி வெறி அர்ப்பர்களுக்கு  உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதை சுட்டிக்காட்டியும் , இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் இருவரை சேர்க்கக் கோரியும்  ஜூலை 30 ம் தேதி தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்  குணமுத்து மீண்டும் புகார் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சட்டத்தை முறையாக கையாள வேண்டிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை  ஜாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும்,  இதுவே பட்டியல் சமூக மக்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்தால் அவர்களின் வீடுகள், உறவினர்கள் வீடுகள் என ஏராளமான காவல் துறையினர் அவர்களை  அச்சுருத்துவதும்,  பெரியகுளம் காவல் துறையினரின் நீண்ட நெடுங்கால  ஒருதலை பட்ச செயல் என பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெரியகுளம் காவல்துறையினர் கண்துடைப்பிற்கு வழக்குப் பதிவு செய்து  அதனை மிஸ்டேக் ஆப் பேக்ட்  (MF)  முறையில் அதனை நீக்கி விடுவதையும் கையாள்வதில்  ஆகச்சிறந்தவர்கள் என  பல வழக்குகளில் நிரூபித்துள்ளார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிலர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் . பல ஆண்டுகளாக இதுபோன்று எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் எத்தனை வழக்குகள் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்பதையும் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை நியமித்து  அதனை கண்டுபிடிக்க வேண்டுமென தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளனர் .

 

—   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.