“மத்திய சென்னை” சட்டமன்றத் தொகுதிகள் யாருக்கு ஆதரவாக உள்ளது தேர்தல் களம் ?
மத்திய சென்னை மக்களவை என்பது வரலாற்று சிறப்பு மிக்க தொகுதி. இந்தத் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி சார்பில் 1977இல் பா.இராமச்சந்திரன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்தார். பின்னர் கேரளா ஆளுநராகவும் இருந்தார். டாக்டர் கலாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியாகும். முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் 2014ஆம் ஆண்டு தவிர்த்து 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்தை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோத் பி.செல்வத்தை சுமார் சுமார் சுமார் 2 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தயாநிதி மாறன்- திமுக – 4,13,848
வினோஜ் பி. செல்வம் – பாஜக – 1,69,159
பார்த்தசாரதி – தே.மு.தி.க – 72,016
கார்த்திகேயன் – நாதக – 46,031
வில்லிவாக்கம் , எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் களம் பற்றிய விவரங்கள்.
வில்லிவாக்கம்
இந்தத் தொகுதியில் க.சுப்பு, வி.பி.சித்தன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த அ.வெற்றியழகன் வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகர் அவர்களைத் தோற்கடித்தார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 76 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 38 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 38 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 13ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தயாநிதி மாறன் சுமார் 72 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 13ஆயிரம் வாக்குகளையும் பாஜக 27ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 32ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 9ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட38 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 32 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், இந்த வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது விருகம்பாக்கம் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
எம்பூர் (தனி)
இந்தத் தொகுதியில் பேராசிரியர் க.அன்பழகன், ஜோதி வெங்கடாசலம், இளையபெருமாள், 5முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பரிதி இளம்வழுதி, ஆகியோர் போட்டியிட்ட தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சைதாப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த ஐ.பரந்தாமன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை தோற்கடித்துள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 68 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 38 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6 ஆயிரம் வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் 9 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எம்பூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் சுமார் 63ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 13 ஆயிரம் வாக்குகளையும், பாஜக 23 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 36 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 6 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 30 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 36ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது எழும்பூர் தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.
துறைமுகம்
இந்தத் தொகுதியில் திமுக தலைவர் கலைஞர் 1989 மற்றும் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த சேகர்பாபு தொடர்ந்து 2 முறையாக வெற்றிபெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி.செல்வத்தை தோற்கடித்துள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 59 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 32 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 3 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 3ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.
தயாநிதி மாறன்
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தயாநிதி மாறன் சுமார் 53ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 5ஆயிரம் வாக்குகளையும், பாஜக 27 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 24 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 3 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 22 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 24ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சேப்பாக்கம் – திருவலிக்கேணி
சேப்பாக்கம் – திருவலிக்கேணி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமாக வேட்பாளர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலியைத் தோற்கடித்துள்ளார். வெற்றிப் பெற்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்று தற்போது துணை முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 93 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணியில் பாமக பெற்ற வாக்குகள் 23 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 70ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை 9ஆயிரம் வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 4ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவலிக்கேணி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தயாநிதி மாறன் சுமார் 80ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 9ஆயிரம் வாக்குகளையும், பாஜக 24 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார்37 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 11 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 70 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 33 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது திமுக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் விளக்கு
இந்தத் தொகுதியில் திமுகவின் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கே.ஏ. மதியழகன், சாதிக்பாட்சா, கே.ஏ. கிருஷ்ணசாமி, 4 முறை மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் டாக்டர் எழிலன் நாகநாதன். இவர் அதிமுக கூட்டணியில் பாஜகவில் போட்டியிட்ட நடிகை குஷ்பு-வை தோற்கடித்துள்ளார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 71 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 39 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 32 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் 11 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தயாநிதி மாறன் சுமார் 66ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 12 ஆயிரம் வாக்குகளையும், பாஜக 31 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 43 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 7 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட32 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறும்.
அண்ணா நகர்
அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் கலைஞர், க.அன்பழகன், ஆற்காடு வீரசாமி 3முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுகவில் கோகுல இந்திராவும் வெற்றி பெற்றுள்ளார். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அண்ணாநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் எம்.கே. மோகன். இவர் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கோகுல இந்திராவை தோற்கடித்துள்ளார். திமுக வேட்பாளர் 2 முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 80 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 52 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 38ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10ஆயிரம் வாக்குகளையும். மக்கள் நீதி மய்யம் 17ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தயாநிதி மாறன் சுமார் 76 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக 19ஆயிரம் வாக்குகளையும், பாஜக 33 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 33 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 35ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 38 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 33 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது அண்ணா நகர் தொகுதியில் திமுக தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த சந்திப்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைக்கு உட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகளில் யாருக்குத் தேர்தல் களம் ஆதரவாக உள்ளது என்பதைப் பார்ப்போம்.