மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் கொடுத்தது போல பலே மோசடி !
தேனி மாவட்டத்தில் சமூண்ணதி பைனான்சியல் இன்டர்மீடியேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பெண்களுக்கு லோன் கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் லோன் கொடுத்ததாக பெண்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி வைகை தொண்டு நிறுவனம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மகாசக்தி தொண்டு நிறுவனம், போடி எஸ்எம்எஸ் தொண்டு நிறுவனம், சின்னமனூர் டி,டபிள்யு,சி தொண்டு நிறுவனம் உள்ளிட்ட தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 1200 கிராமப்புற பெண்களுக்கு கடன் வழங்காமல் கடன் வழங்கியதாக, பெண்களை பணம் கட்ட சொல்லி மிரட்டி வருகின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள ராஜதானி காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புகார் தெரிவித்தும் உரிய விசாரணை செய்யாமல் பெண்களைஅனுப்பி வைத்து விட்டனர்.
எனவே, தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு லோன் கொடுக்காமலே லோன் கொடுத்ததாக மிரட்டி வரும் சமூண்ணநதி பைனான்ஸ் இண்டர்மிடேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
– ஜெய்ஸ்ரீராம்.