அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பணிகள் சிறப்பாக உள்ளன… தொலைபேசியில் பாராட்டிய முதல்வா்!

திருச்சியில் அடகு நகையை விற்க

சாத்தூர் எஸ்.ஐ.ஆர். பணிகளைப் பாராட்டி திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி தொலைபேசி அழைப்பு

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். (Special Institutional Review) பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களிடம் தொலைபேசி மூலம் பணித் தீவிரத்தைப் பற்றி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதன் ஒரு பகுதியாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேற்று சாத்தூர் பகுதிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கடற்கரை ராஜ்
கடற்கரை ராஜ்

இந்த ஆய்வின்போது சாத்தூர் நகராட்சித் தலைவர் குருசாமி, சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ், தாசில்தார் ராஜாமணி ஆகிய அதிகாரிகள் அமைச்சருடன் இணைந்து இருந்தனர். அதிகாரிகளுக்கு பணிகளை மேலும் வேகமாகவும் திறம்படவும் முன்னெடுக்க தேவையான அறிவுரைகளை அமைச்சர் சென்றுவிட்ட இந்நேரத்தில்,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஒரு முக்கிய நிகழ்வு இடம்பெற்றது.

சாத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்ற கடற்கரை ராஜ் “அண்ணாச்சி…” என்று மரியாதையுடன் உரையாடலைத் தொடங்க, மறுமுனையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சாத்தூர் பகுதியில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவதாக பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து,

“பணிகள் மிகவும் சிறப்பாக உள்ளன… இதையே தொடர்ந்து மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்லுங்கள்” என்று முதல்வர் நேரடியாக அறிவுரையும் ஊக்கமும் வழங்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நிகழ்விடத்தில் இருந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரிடமும் இது பெரும் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

 

—    மாரீஸ்வரன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.