முதலமைச்சர் வருகை… விழாக்கோலம் பூண்டுள்ள நெல்லை!
நெல்லை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20,21-ந் தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . அப்போது அவர் முடிவற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல் , கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் . முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்காக 20-ம் தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.
அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே. டி. சி. நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நான்கு வழி சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையைக் கடந்து அங்குள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மேனும், தி.மு.க. பாளைதெற்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து நான்கு வழி சாலை வழியாக டக்கரம்மாள் புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தரிசன பூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெரு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து, விழா முடிந்ததும் நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
அதன் பின்னர் மறுநாள் (21-ந் தேதி) காலை 9.30 மணிக்கு ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில். ஆர் ஆர் எஸ் எஸ் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
இதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. அங்கு மேடையில் தற்காலிக கழிப்பறைகள், பயனாளிகள், பொதுமக்கள், நிர்வாகிகள் அமருவதற்கு சேர்கள், அவர்களுக்கு மின்விசிறி, தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது, மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சாலைகளில் முழுவதுமாக வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.








Comments are closed, but trackbacks and pingbacks are open.