திருச்சி மாவட்டம் – சமஸ்பிரான் பகுதி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
குழந்தைகள் மீதும் ரோஜா மலர்கள் மீதும் மிகுந்த பிரியம் கொண்டவர் ஜவாஹர்லால் நேரு. நாளைய குடிமகன்களான நாட்டின் எதிர்காலமான குழந்தைகளை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்திட வேண்டும் என்றார் நேரு. குழந்தைகளிடம் அவர் செலுத்திய அபரிமிதமான அன்பினால் அவர் பிறந்த நானை நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடுகிறோம்.
நவ. 14 குழந்தைகள் தினத்தைினை சிறப்பிக்கும் விதமாக திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவா்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி இனிப்புகளும், பாிசு பொருட்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா,விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், வர்த்தக அணி செயலாளர் அன்சாரி, விழி அணி செயலாளர் ஜின்னா ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கிளைத் தலைவர் ரபி, நிர்வாகிகள் ஏஜாஸ்,ஷேக் அப்துல்லா,ஹபீஸ் மற்றும் பள்ளிவாசல் இமாம் ஹஸ்ரத் ஷாபி. அம்ஜத் மற்றும் நத்தர்ஷா பள்ளிவாசல் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.