விவசாய கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் ! வலுக்கும் எதிர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோர் அமுலாக்கம்… இனி விவசாயிகள் கடன் பெற முடியாது என்று கூட்டடுறவுத்துறை  அமைச்சரின் அறிவிப்புக்கு   கண்டனம் தொிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, மாநில பொருளாளர்  அயிலை சிவசூரியன் ஆகியோர் கூறியுள்ள செய்தி அறிக்கையில்…

கே.ஆர். பெரியகருப்பன்
கே.ஆர். பெரியகருப்பன்

Sri Kumaran Mini HAll Trichy

மே 26 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் அவர்கள் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் (SIBIL score) மதிப்பெண்… பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பி.எஸ். மாசிலாமணி
பி.எஸ். மாசிலாமணி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரிசர்வ் வங்கி  அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள்  கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத்துறை  அமைச்சர்  கூறிய நிலையில்..  கூட்டடுறவுத்துறை  அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக.. இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விழைகிறோம்..

Flats in Trichy for Sale

வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தன் மூலதனத்தை வெட்ட வெளி நிலத்தில் போட்டுவிட்டு… இயற்கை பேரிடர்கள்.. பருவ கால மாறுபாடுகள்…. இடுபொருள்களின் மாற்றங்களினால் ஏற்படும் பயிர் வளர் நிலை இடர்களை எல்லாம் தாண்டி.. பல மாதங்கள் காத்திருந்து… போட்ட முதலீட்டை  திருப்பி எடுக்கும் வரை… இவர்கள் மட்டுமல்ல.. இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படும் துன்பங்கள் மாளாது.

சிபில் ஸ்கோர் (SIBIL score)
சிபில் ஸ்கோர் (SIBIL score)

இப்படியான பாதிப்புகள் மிக கூடுதலாகி வரும் நிலையில்…  சிபில் ஸ்கோர் தகுதியைக் அளவீடாக கொண்டு விவசாயிகள்  கடனை தீர்மானிக்க கூடாது.  கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான்..விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு  தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. வணிக வங்கிகளில் நடைமுறைகளில்  உள்ள இம்முறை இப்போது கூட்டுறவுத்துறையிலும் அமல்படுத்தப்படுகிறது.

அயிலை.சிவசூரியன்
அயிலை. சிவசூரியன்

வேளாண்மை தொழிலை புரிந்து கொள்ளாது… குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து.. எந்த இடர்கள் நாட்டில் வந்தாலும்…..தன் வருமானத்தில் பங்கம் இல்லாமல் இருக்கிற உயர் அலுவலரின் எதார்த்தமற்ற சிந்தனைகளால் வந்த அறிவிப்பாகும் இது. வேளாண்மையில் ஏற்படும்  இழப்பீட்டை  சிபில் ஸ்கோர் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல் படுத்தினால்.. விவசாயிகளின் வாழ்வு தகுதியும் சிபில் ஸ்கோர் வரம்பில் வந்துவிடும் . இப்படியான நெருக்கடிகள் தீராத நிலையில்.. வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை  ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே  தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு  வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.