ஆளுநர் – முதல்வர் சுமூகமான சந்திப்பு – அடுத்து என்ன ?  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆளுநர் – முதல்வர் சுமூகமான சந்திப்பு – அடுத்து என்ன ?  

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி சில பகுதிகளை வாசிக்காமல் விட்டுவிட்டார் என்பதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,“அரசு தயாரித்த ஆளுநர் உரையே செல்லத்தக்கது” என்று தீர்மானம் நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிகழ்வின் இறுதியில் இசைக்கப்பட வேண்டிய தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே ஆளுநர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, அரசின் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் கடத்த, தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றம் முதல் அமைச்சரை அழைத்து ஆளுநர் பேசவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்தே ஆளுநர் – முதல்வர் சந்திப்பு இந்த ஆண்டின் இறுதியில், இன்று (30.12.2023) மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

முதல்வர் - கவர்னர் சந்திப்பு
முதல்வர் – கவர்னர் சந்திப்பு

ஆளுநர் வாசலில் வரவேற்பு

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அண்மையில் நடந்த சென்னை பெருவெள்ளம் தொடர்பான நிவாரணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், உச்சநீதிமன்ற அறிவுரைப்படி ஆளுநர் முதல்வரைச் சந்திக்கக் கடிதம் எழுதினார். வெள்ள நிவாரணப் பணிகள் முடிந்து சந்திப்பதாக முதல்வர் பதில் விடுத்திருந்தார். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த ஒப்புதல் பெற வேண்டி ஆளுநரிடம் முதல்வர் நேரம் கேட்டிருந்தார். சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. முதல் அமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, இரகுபதி, இராஜகண்ணப்பன் ஆகியோர் சந்திப்பில் உடன் சென்றிருந்தனர். ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் அறையின் வாசலில் நின்று வரவேற்றுப் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு முதல் அமைச்சரும் ஆளுநருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் அமைச்சர் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

  1. பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல் அமைச்சர் இருப்பது என்ற 10 கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்பதால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கையொப்பமிட்டுத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  2. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் 19 மாதங்கள் ஆளுநரின் நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாகக் கோப்புகள் கையொப்பமிட்டுத் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  3. நீண்ட நாள் சிறையில் உள்ள கைதிகளை விடுக்கக் கோரும் கோப்புகளின் மீது ஒப்புதல் தரவேண்டும்.

சந்திப்பு சுமூகம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சந்திப்பு முடிந்து வெளியே வந்த சட்ட அமைச்சர் இரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சந்திப்பு சுமூகமாக இருந்து என்றும் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்ட செய்திகளையும் குறிப்பிட்டார். தொடர்ந்து ஆளுநர் மீண்டும் சந்திக்க அழைத்தால் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,“ஆளுநர் முதல்வர் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது என்றும், அரசியல் சாசனத்திற்குட்பட்டு ஆளுநர் நடந்துகொள்வதாகச் சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது”

முதல்வர் - கவர்னர் சந்திப்பு
முதல்வர் – கவர்னர் சந்திப்பு

ஆளுநர் மீது நம்பிக்கையில்லை

ஓராண்டு காலம் ஆளுநர் Vs முதல்வர் மோதல் முற்றிய நிலையில் ஆண்டின் இறுதியில் சந்திப்பு நிகழ்ந்திருப்பது இருவரிடையே நல்லுறவு நீடிக்குமா? என்ற கேள்விக்கு ஊடகங்களில் பேசிய திமுக ஊடகப் பேச்சாளர் இராஜீவ்காந்தி பேசும்போது,“இந்தச் சந்திப்பை உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படியே ஆளுநர் நிகழ்த்தியுள்ளார். அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்வேன் என்ற ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு, இதுவரை ஆளுநர் அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்ளவில்லை என்பதைத்தான் சுட்டுவதாகவே பொருள்கொள்ள வேண்டியுள்ளது. பிரச்சனைகளை முடித்து வைப்பார் என்று ஆளுநர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

உச்சநீதிமன்றத்தில்தான் தீர்வு

நீதிமன்றம் -
நீதிமன்றம் –

மூத்த பத்திரிக்கையாளர் சிவப்பிரியன் ஊடகங்களில் பேசும்போது, “ஆளுநர் பிரச்சனையைத் தீர்ப்பதாக இருந்தால், அவர் முதல்வரிடம் நேரடியாக அனைத்துக் கோப்புகளுக்கும் ஒப்புதல் தந்து விடுகிறேன் என்று கூறியிருக்கலாம். அதனை விடுத்து அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்வேன் என்பது பிரச்சனையைத் தீர்க்க விரும்பாததுபோல் உள்ளது. காரணம், ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழகம் தொடர்பான 10 கோப்புகளை அரசியல் சாசனத்தை மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தற்போது அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்வேன் என்ற ஆளுநரின் பதிலைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும், ஆளுநர் இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு எந்த மாதிரி பதிலைச் சொல்லப்போகிறார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆளுநர் நடத்திய முதல்வர் சந்திப்பில் எந்தத் தீர்வும் ஏற்படாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பிரச்சனைகளைத் தீர்க்கும்” என்று குறிப்பிட்டார்.

மோதலும் முடிவும்

2024 ஜனவரி மாதத்தில் ஆளுநர் மீதான வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது ஆளுநர் என்ன அறிக்கை கொடுக்கப்போகிறார் என்பதும், தொடர்ந்து உச்சநீதிமன்றம் எப்படித் தீர்ப்பை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்தே ஆளுநர் – முதல்வர் மோதல் முடிவுக்கு வரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்போம்.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.