அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூடான சுவையான ”தேங்காய் தெரட்டி பால்”- சமையல் குறிப்பு- 48

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! வீட்டுக்கு யாராவது திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா உடனே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணுமா? வாங்க தேங்காய் தெரட்டி பால் சட்டுனு செய்யக்கூடிய ஸ்வீட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தேங்காய் ஒரு கப், வெல்லம் ஒன்றரை கப், ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன், அரிசி மாவு ஒரு ஸ்பூன், நெய் தேவையான அளவு, முந்திரி பாதாம் சிறிதளவு, தேங்காய் துண்டுகள் இரண்டு ஸ்பூன்.

செய்முறை:-

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மிக்ஸியில் தேங்காய், வெல்லம், அரிசி மாவு, ஏலக்காய் தூள் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே நெய்யில் அரைத்த தேங்காய் வெல்ல கலவையை சேர்த்து மேலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பச்சை வாசனை போகும் அளவும் வாணலியில் ஒட்டாது வருமாறு மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

தேங்காய் தெரட்டி பால்
தேங்காய் தெரட்டி பால்

அதன் பின் வறுத்த முந்திரி பாதாமை சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இறக்கினால் சுவையான தேங்காய் தெரட்டி பால் ரெடி!! இதனை சூடாகவும் சாப்பிடலாம்.

 

  —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.