அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரு டிகிரியாவது படிச்சி முடிச்சிரனும் …

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆறு மணிக்கு அலாரம் அலர … அசைந்து கூட கொடுக்காமல் தூக்கத்தை தொடர்ந்தாள் வித்யா.

அட இவ பாட்டுக்கு அலாரம் வச்சிட்டு நம்ம தூக்கத்தைல கெடுக்குறானு வாய்க்குள் முனகியபடியே அலறிய அலாரத்தை அணைத்தாள் அறைத்தோழி அம்பிகா.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது எதையும் கண்டுகொள்ளாமல் அசதியில் புரண்டு படுத்தாள் வித்யா. எட்டு மணி வாக்கில் எழுந்தவள் அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருத்தியும் அதுவரை எழுந்திருக்கவேயில்லை.

“வலையோசை கலகலவென” ரிங்டோன் ஒலிக்க எடுத்து பேசினாள் வித்யா.

https://www.livyashree.com/

“எட்டு மணி வரைக்கும் அப்படி என்னடி தூக்கம்? நல்லா சொகுசா தூங்கி எந்திரி. வெளங்கிறும்” அம்மாவின் அர்ச்சனை தான் அன்று அவள் கேட்ட முதல் வார்த்தை.

அம்மாவுக்கு அவள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

“இவளுங்க எங்கே நம்மளை நிம்மதியா தூங்க விடுறாளுங்க … நடுசாமம் வரைக்கும் இவளுக போடுற ஆட்டத்துல நாம எங்கே தூங்குறது?”னு அவளுக்குள்ளாகவே நொந்து கொண்டாள் வித்யா.

சம்பளம் போட்டாங்களா?

இன்னும் இல்லம்மா …

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சரி பார்த்து கிளம்பி வா …

தீபாவளிக்கு டிரஸ் எடுத்தியானு? கேட்கல… டிரஸ் எடுத்துக்கோனு காசும் போட்டு விடல … சம்பளம் மட்டும் போட்டாச்சானு கேட்குறாங்களேனு வேதனை வாட்டியது அவளை…

பன்னிரண்டாவது படிச்சு முடிச்ச கையோட, கல்யாண பேச்சை வீட்டில் ஆரம்பிக்க … தோழிகளின் துணையோடு விண்ணப்பித்து படிக்க வந்துவிட்டாள் வித்யா. என்னதான் அரசாங்க கல்லூரி, அரசாங்க ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சாலும், அன்றாட செலவுன்னு இருக்கும்தானே? காசுன்னு கேட்டா, கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருவாங்களோனு பயம் அவளுக்கு.

ஒரு டிகிரியாவது படிச்சி முடிச்சிரனும். யாரையும் நம்பியில்லாம, சொந்தக்காலில் நின்னு சாதிக்கனும்னுங்கிற ஆசை அவளுக்கு. வீட்ல பேருக்குத்தான் அப்பா. அவரால பைசா காசு பிரயோசனம் இல்ல. அப்பனை போலவே, ஆம்பள புள்ள. இதுங்கள வச்சிகிட்டு பொட்ட புள்ளைய எப்படி கரை சேர்க்கிறது. புள்ளைய படிக்க வச்சா, நகை நட்டுக்கு எங்கே போறதுங்கிற கவலை அம்மாவுக்கு.

இரவு தூக்கம் கெட்டதையும் அம்மா கேட்டதையும் காட்டி கொள்ளாமல், பொய்யான புன்னகையோடு கிளம்பினாள் கல்லூரிக்கு. கல்லூரி முடித்த கையோடு, பகுதிநேர வேலை பார்க்கும் கம்பெனிக்கு கிளம்பினாள்.

மண்டையை குடையும் ஆயிரம் கவலைகளோடு, ஒதுக்கப்பட்ட வேலைகளை முடித்து கிளம்பும் நேரத்தில் ஆறுதலாய் அக்கவுண்ட்டில் வந்து விழுந்தது இரண்டாயிரம் ரூபாய். அதுதான் அவளது சம்பளம்.

அந்த காசில் தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என்று அவள் ஏற்கெனவே போட்டு வைத்த திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, அப்படியே அம்மாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பேருந்தில் பயணமானாள்.

அலைபேசி அலற, எடுத்துப் பேச பையை துலாவினாள் …

அவள் தங்கியிருந்த விடுதியில் நாலு நாளா தண்ணீர் வராமல் துவைக்க வழியின்றி சேர்ந்த அழுக்கு துணிகளுக்கு நடுவே சிக்கிக்கிடந்தது அலைபேசி … அவளைப் போலவே !

 

 —   கலைமதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.