பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய புகார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய புகார் !

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் வழக்குரைஞர் பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் விழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு சீல் வைத்து, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் கிராம கோயில் மோதல் தொடர்பாக விமர்சித்து பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4 இல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்தநிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் தலைமையிலானவர்கள், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் வழக்குரைஞர் பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மனு வழங்கினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அந்த மனுவில், பாமக நிறுவனர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் திரெளபதி அம்மன் கோயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நீண்ட காலமாக கடைபிடிக்கும் மரபான தீண்டாமையை தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் பேசிய பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் நகர காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

– சோழன்தேவ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.