விருதுநகர் கிழக்கு கழக செயலாளர் மனைவி மறைவு – கே.டி. ராஜேந்திரபாலாஜி இரங்கல் !
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் அவர்களின் மனைவி டாக்டர் ஜி. வள்ளி அவர்கள் கடந்த 14.10.2025 உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைவுச் செய்தி அறிந்த சிவகாசி கழக அமைப்பு செயலாளர் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அக்-15 அன்று இராமுத்தேவன்பட்டிக்கு சென்று, மறைந்த டாக்டர் ஜி. வள்ளி அவர்களின் பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
துணைவியாரை இழந்து துயரத்தில் உள்ள ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி துயரை பகிர்ந்துகொண்டார்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.