குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிரச்சாரம் செய்ய வாகன ஏற்பாடு செய்கிறார் கல்வி அமைச்சர், மிகவும் மகிழ்ச்சி. ஆனால், கீழ்க்காணும் இந்தக் கல்வி உரிமைச் சட்டம் வருடத்திற்கு வருடம் கண்ணுக்குத் தெரியாமல் லட்சக்கணக்கான குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு வரவிடாமல் செய்கிறதே.

இது குறித்து ஏன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரக்கூடாது? மக்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடாது? அரசாங்கப் பள்ளிகள்தானே அனைவருக்குமானது என்று.

Frontline hospital Trichy

ஒவ்வாத நீட்டுக்கு வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்தோமே… அதே போல இந்தச் சட்டம் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்று மக்களிடையே கருத்துக்கேட்பு வைத்து முடிவுக்கு வரவேண்டிய சூழலில்தான் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் நிலைமை உள்ளது.

வீட்டுக்கு ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள் என வைத்திருக்கும் பெற்றோர்கள் ஏற்கனவே தனியார் பள்ளிகளில்தான் தஞ்சம் புகுந்தது வருகின்றனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இப்படி ஒரு அறிவிப்பால், ஏறத்தாழ லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா?அரசு வழங்கும் கல்விக் கட்டணத்தைப் பயன்படுத்தி நாம் ஏன் நமது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கக்கூடாது என்றுதான் ஆசைப்படுகின்றனர். (அப்படிப் படிக்கப் போகும் குழந்தைகளின் துன்பக் கதைகள் ஏராளம் என்பது வேறு கதை).

காடு மேடு நகரம் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பரிசுகள் அறிவிக்கின்றனர். என்னென்னவோ செய்கின்றனர்.

ஆனால் தனியார் பள்ளிகளுக்கு நோகாமல் சில நூறு கோடிகளைக் கொடுத்து நமது குழந்தைகளையும் அனுப்பி வைப்பது எந்த வகையிலும் சரியில்லை.

இதற்காக உழைக்கும் கல்வி அதிகாரிகள் துறைக்குப் பணியாற்றுவதாக எண்ணி ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கைக்குத் துரோகம் செய்கின்றனர். வரும் காலங்களில் இப்படியே சட்டம் போட்டுத் தனியார் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் வேலையைச் செய்தால் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் இருக்கமாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

TET தேர்வு அனைத்தும் கண்துடைப்பு, வரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் நிரந்தரமாக ஆசிரியர் நியமனம் செய்யவே மாட்டீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

அரசுப் பள்ளிகளில், எங்கோ சிலவற்றுள்….நூற்றில் சில பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் பயில்கின்றனர். எஞ்சிய அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் உபரி என்று தான் பட்டியல் நீள்கிறது.


இதுதான் கள எதார்த்தம் எனும்போது, குடியிருப்பு கணக்கில் அறியப்படும் சொற்ப எண்ணிக்கையிலான குழந்தைகள் தனியார் பள்ளிகளை நாடும்போது, அரசுப்பள்ளிகளில் எப்படி எண்ணிக்கை கூடும்?

இருக்கும் குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் RTE சட்டப்படி சேரச் சொல்லிவிட்டால் வெகு விரைவில் அரசுப் பள்ளிகள் அழிந்து விடும் என்று தோன்றவில்லையா?

அதைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், பிற கல்வி அதிகாரிகள், கல்விச் செயலர், கல்வி அமைச்சர் உட்பட அனைவருக்கும் இதில் பொறுப்புண்டு என்பதை உணர்வோம்.

– கல்வியாளர் உமா

 

மேலும் செய்திகள் படிக்க:

https://angusam.com/tamil-varsity-again-mired-into-controversy/

 

அங்குசம் யூடியூப்

https://youtube.com/@AngusamSeithi

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.