டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் எம்.பி. கனிமொழி திடீர் சந்திப்பு !
டெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சி கூட்டணியின் ஒற்றுமையையும் அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்த விருந்தில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக மூத்த தலைவர்கள் சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், கனிமொழி கருணாநிதி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியின்போது, பாதிவழியில் அவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
— மணிபாரதி