எங்களை பற்றி

அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் !

நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில் உள்ள அறத்தை மட்டும் கருத்தில் கொண்டு உண்மையை சொல்ல துளியும் அச்சமில்லாது எந்த ஒரு சமரசமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்போம் இணையவழியில் தொடங்கிய எங்கள் பயணம் தற்போது அச்சு ஊடகமாக உங்கள் முன் காட்சியளிக்கிறது.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

இணைய வழியில் செய்தி வெளியிடத் தொடங்கியது முதலே பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, மக்களிடம் உள்ள அறியாமை என்னும் இருளில் இருந்து நீக்க அங்குசம் உழைத்துக் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய அடுத்த கட்ட பரிணாமத்தை அடைந்து தற்போது அச்சு ஊடகமாக  உங்கள் கையில்  உள்ளது.

உள்ளதை உள்ளபடியே வெளியிடும் அங்கு சத்தை  அறிந்த பலருக்கும் ஒரு விஷயம் இருக்கலாம். யார் இதன் உரிமையாளர்…?  இதற்கு பொருளாதார பலம் யார் என்று உங்களில் பலருக்கு கேள்வி எழலாம்.   மேலும் எந்த ஒரு சமரசமும் இல்லாது உண்மையை சொல்வதில் துளியும் அச்சமில்லாத எளிய மக்களுக்கான ஒரு ஊடகமாக பயணிக்கும் அங்குசத்தை பற்றிய முழு விஷயங்களையும் உங்களிடம் தெரியப்படுத்தவே இந்த பதிவு !

- Advertisement -

4 bismi svs

ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் :

ஜெ.டி.ஆர், அங்குசம் செய்தி

எனது தந்தை ஜீவராஜ் தாவீது கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக திருச்சி ஜங்சன் பகுதியில் புத்தகக் கடை வைத்திருந்ததால் சிறுவயது முதலே புத்தகங்களோடு உரையாடத் தொடங்கி, கல்லூரி காலத்தில் தமிழ்நாட்டில் முன்னணி புலனாய்வு இதழில் மாணவப் பத்திரிகையாளராக சேர்ந்து மக்களுக்கான பிரச்சினைகளை மக்களோடு இருந்தே எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து 19 ஆண்டுகாலம் பணியாற்றிய பின் தற்போது ‘அங்குசம் செய்தி’ இதழின் வழியாக மக்களில் ஒருவனாக உங்களை சந்திக்கிறேன். கடந்த காலங்களில் அநீதிக்கு எதிரான எழுதுகோலாக எப்படி இருந்தேனோ அதுபோலவே என்றும் மக்களை தெளிவுபடுத்தவும், அரசியல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்னுடைய எழுத்து தொடர்ந்து பயணிக்கும்.

நமது அங்குசம் செய்தி இதழுக்கான முழு பொருளாதாரமே மக்கள் தான், அதனால் தான் ‘அங்குசம் செய்தி’ இதழ், ‘அங்குசம் சமூக நல அறக்கட்டளை‘, வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த அங்குசம் சமூகநல அறக்கட்டளைக்கான  அனைத்து நிதிகளும் மக்களிடமிருந்து மட்டுமே  பெறப்படுகிறது. மக்கள் தரும் நன்கொடைகளை நிதி ஆதாரமாக கொண்டு மட்டுமே அங்குசம் செயல்படுகிறது என்பதை உறுதியாக கூறுகி றோம், இப்படியாக ‘அங்குசம் செய்தி’ இதழ் எப்பொழுதுமே மக்களுக்கான இதழாக இருக்கும் என்பதை உறுதியோடும், உரிமையோடும் கூறிக்கொள்கிறோம். இணைந்து பயணிப்போம் !

ஜெ.டி.ஆர்

5 national kavi