சமையல் குறிப்பு: கொத்தமல்லி இலை தட்டை!
வணக்கம், சமையலறை தோழிகளே!இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி ஒரு வித்தியாசமான ஹெல்த்தி ரெசிப்பியான கொத்தமல்லியில் தட்டை தாங்க. நம்பல பல பேர் இதுக்கு முன்னாடி ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க, ஆனா இப்போ இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க இது இருக்கிற டேஸ்ட்ல நீங்க அடிக்கடி இதை செய்வீங்க, சரி வாங்க நம்ம எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு ஒரு கப், ரவை அரை கப், வெள்ளையன் 2 டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு ஸ்பூன், சில்லி பவுடர் ஒரு ஸ்பூன், நெய் இரண்டு ஸ்பூன், பெருங்காயத்தூள் இரண்டு சிட்டிகை, மஞ்சத்தூள் அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், எண்ணெய் பொறிக்க.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, நறுக்கிய கொத்தமல்லி, வெள்ளை எள், உப்பு, தனியா தூள், சில்லி பவுடர், நெய், பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு பூரி மாவு பக்குவத்திற்கு நீரை ஊற்றி பிசைந்து 30 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, எண்ணெய் காய்ந்ததும் நமக்கு தேவையான அளவிற்கு தட்டை செய்து காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது மொறு மொறுப்பான கொத்தமல்லி இலை தட்டை காரசாரமாக சுவைக்க தயார். இதனை, ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் வைத்து அவ்வப்பொழுது சாப்பிட்டு மகிழலாம்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.