ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு.. ! பால் குடிக்க முடியாமல் அவதிப்படும் கன்று !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு.. ! பால் குடிக்க முடியாமல் அவதிப்படும் கன்று ! – அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது. இந்த கன்று குட்டி இரண்டு வாய், இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராஜதூரை இவருடைய தாய்மையடைந்த பசுமாடு இன்று 26.07.2024  மாலை , ஒரு கன்று குட்டி ஈன்றெடுத்தது அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு
ஒட்டிய இரட்டை தலையுடன் ஈன்ற பசு

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்த கன்றுகுட்டி இரண்டு வாய், இரண்டு முக்கு, இரண்டு நாக்கு இரண்டு காதுகளுடன் நான்கு கண்களுடன் காணப்படுகிறது ஆனால் நான்கு கண்களில் இரண்டு கண்களினால் மட்டுமே கன்று பார்க்க முடிகிறது தலை அதிக கணத்துடன் உள்ளதால் தலையை தூக்க முடியாமல் கன்று சிரமப்படுகிறது, மற்ற கன்றுகளிலிருந்து வேறுபட்டு காணப்படும் இந்த அதிசய பெண் கன்றைக் காண , அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டு பார்வையிட்டு செல்கின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் இந்த பசுவின் உரிமையாளர் ராஜதுரை பசு மாட்டையும், ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.இதுபோன்று  இரட்டை தலையுடன் பிறப்பதற்கு மரபணு மாற்றமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் பெரும்பாலும் அது நீண்ட நாள்கள் உயிருடன் இருப்பது கடினம். கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.