ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட கொடூர சைக்கோ! வாழ்நாள் சிறை ! திருப்பத்தூர் கோர்ட் அதிரடி!
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சைக்கோவுக்கு சாகும் வரை சிறை.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கந்தகம்பாளையத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் தங்கி பனியன் கம்பெனியில் வேளை செய்து வந்தவர் கடந்த பிப்ரவரி 6-ம் தேதியன்று சித்தூரில் வசிக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சித்தூர் வழியாக செல்லும் கோவை திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்து வந்தார்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தனியாக பயணித்த கர்ப்பிணி பெண்ணை , வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள கீழ் ஆலத்தூர் அடுத்த பூஞ்சோலை என்ற கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் திடிரென்று பெண்கள் பெட்டியில் ஏறி பயணம் செய்தவன்,
வேலூர் மாவட்டம் லத்தேரி ரயில் நிலையம் கடக்கும்போது கர்ப்பிணி பெண்ணின் ஆடைகளை கழட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சித்து . பின்னர் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்து . அந்த பெண்ணின் கையை உடைத்து எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளான் . அதில் தலை, கை, கால் என பலத்த காயம் அடைந்து விழுந்த கர்ப்பிணி பெண்னை அருகில் இருந்து பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் அதில் அவர் வயிற்றில் வளர்ந்த சிசு மட்டும் உயிர் இழந்தது
அதனைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரில் பேரில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியதில் அவனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதில் மாவு கட்டு போட்டு 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனை விவரங்கள் ஜூலை 14-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்
அதனைத்தொடர்ந்து 14/07/.2025 அளிக்கப்பட்ட தீர்ப்பில் ஹேமராஜ் -க்கு 3 ஆயுள் தண்டனையும் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உள்பட சாகும் வரை சிறை தண்டனை , விதித்து தீர்ப்பளித்தார்
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசும், இந்திய ரயில்வேவும் . தலா 50 லட்சம் விதம் மொத்தம் ரூ. 1 கோடி ரூபாய் நிவாணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறர்
— மணிகண்டன்