கிரிப்டோ முதலீடு மோசடி!
சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த அருணாசலம் (58) என்பவர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும் என நம்பி மனுதாரர் பல்வேறு தவணைகளில் சுமார் Rs.22,48,500/- முதலீடு செய்து இழந்துள்ளார். இது சம்பந்தமாக மனுதாரர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தான் இழந்த பணத்தை மீட்டு தருமாறு புகார் அளித்திருந்தார்.
இப்புகார் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும், சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். பாலகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும். சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.A.ஹேமாவதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் முகிலன் (22) S/o கணேசன் மற்றும் தங்கமணி (43) w/o கணேசன் என்ற இருவரையும் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் மீது பல வழக்குகள் இருப்பதாகவும். இம்மோசடியில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களையும் தேடி வருவதாகவும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A.ஹேமாவதி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 4 மொபைல் போன்கள், சிம்கார்டுகள் டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பொதுமக்கள் இது போன்ற முதலீட்டு மோசடிகள், போலி விளம்பரங்கள், OTP மோசடி, FedEx பார்சல் மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி. KYC புதுப்பிப்பு மோசடி, போலி கஸ்டமர்கேர் மோசடி, ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, மொபைல் விளையாட்டுகளின் பாதிப்பு, கடன்செயலி மோசடி போன்ற மோசடிகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எந்தவொரு நிதி மோசடிகளால் (அ) சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது சைபர் கிரைம் புகார் இணையதளம் www.cybercrime.gov.in-இல் புகார் அளிக்கலாம்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். இந்த வழக்கில் விரைவாக எதிரிகளை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.