அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிச்சன் கார்னர்ல‌ கறி தோசை! சமையல் குறிப்பு -56

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம கிச்சன் கார்னர்ல‌ கறி தோசை எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

தேவையான பொருட்கள்:

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

200கிராம் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை,2 டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை, 1 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது, 100 கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது,5 முட்டை, 6 கரண்டி தோசை மாவு, தேவையான அளவு உப்பு, 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செய்முறை:

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

சிக்கனை பொடியாக உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஊத்தப்பம் போல் தோசை வார்த்து 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை மேலேப் போட்டு நன்கு பரப்பி மூடி வைத்து வேக விடவும். 2 நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். சூப்பரான கறி தோசை ரெடி. சூடாக க்ரேவியுடன் பரிமாறவும்.

 

—    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.