‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவிய பிராண்டை தொடங்கிய பிரபல நடிகை!
இந்திய சினிமாவின் “நேஷனல் க்ரஷ்” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தனது முதல் தொழில்முனைவு முயற்சியின் முதல் படியாக ‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து பேசியிருந்த ராஷ்மிகா, “ஒவ்வொரு வாசனையும் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. மேலும் எனது வாழ்க்கையின் தனிப்பட்ட நினைவுகள் மற்றும் அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கி இருப்பதாகவும், இது என் ரசிகர்களுடன் என் இதயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வழி, ”இந்த பிராண்டில் உள்ள ஒவ்வொரு வாசனையும் இந்தியாவின் பாரம்பரிய மணங்களான மல்லிகை, இளஞ்சிவப்பு தாமரை, கரும்பு, லைச்சி போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பாக ‘நேஷனல் க்ரஷ்’, ‘இர்ரிபிளேஸபிள்’, ‘காண்ட்ரவர்ஷியல்’ போன்ற வாசனைகள் எனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை பிரதிபலிக்கும் என்று ராஷ்மிகா கூறினார்.
மேலும் இது உலகளாவிய பிராண்ட் மேம்பாட்டு நிறுவனமான The PCA Companies உடன் இணைந்து ‘டியர் டைரி’ பிராண்ட் உலகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவியங்கள், இளமை, மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான பயணங்களை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாசனை திரவியம் 100 மி.லி 2,599 ரூபாய்க்கும், 10 மி.லி 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
— மு.குபேரன்