ஏமாந்த கதைகள் – 1

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பேஸ்புக்கில் நட்பு வட்டத்தில் இருந்த ஒருவர். பெயர் கல்யாண் குமார்.  2022இல் கல்வி நிதிக்காக கோரிக்கை வைக்கிறார். அதற்காக அவருடன் பேசுவதற்கு என்னுடைய தொலைபேசி எண் தருகிறேன்.

அடுத்து, வாட்ஸ்அப்பில் வருகிறார். இப்படியொரு சேதி அனுப்புகிறார்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

கல்யாண் குமாரின் ஐந்து நூல்கள்

  1. மணிவண்ணன் – 50
  2. அப்பாவுக்கு ஒரு இ மெயில்
  3. என் பள்ளி
  4. ஜெயிலில் கேட்ட உண்மைக் கதைகள் – ஜூவியில் வெளியான தொடரின் தொகுப்பு.
  5. நான் சந்தித்த சாதனையாளர்கள்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

என் மீது மதிப்பும் அன்பும் கொண்டுள்ள பதிப்புத் துறை நண்பர் ஒருவருடன் இணைந்து இந்தத் திட்டம் செயலாக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் நட்பு
பேஸ்புக்கில் நட்பு

ரூ 1,400 மதிப்புள்ள இந்த  ஐந்து புத்தகங்களும் சிறப்பு முன்பதிவு திட்டத்தின்படி, நெருங்கிய சில நண்பர்களுக்கு மட்டும் ரூ.1,000க்கு (ஆயிரம் ரூபாய் மட்டும்) வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் பங்கு பெற, நடிகர்கள் திரு.சிவகுமார் அவர்களும் திரு.சத்யராஜ் அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். விழா நடைபெறும் தேதி, இடம் ஆகியவை குறித்து விரைவில் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களின் இல்லங்களுக்கே அந்தந்த மாவட்ட நண்பர்கள், உதவியாளர்கள் மூலம் இந்த புத்தகங்கள் வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது எனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே என்பதால், இதை முகநூலில் பகிர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அறிமுகம் இல்லாதவர்களை இதில் சேர்ப்பதால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க விரும்புகிறேன்.

முன்பதிவிற்கு ரூ.1,000 பணம் அனுப்ப வேண்டிய வங்கி விபரம்:

  1. KALYAN KUMAR, ICICI 000000000

G pay: 000000

பணம் அனுப்பிய நண்பர்கள் அதன் விபரத்தையும், உங்கள் முகவரியையும் வாட்ஸ் அப் மூலம் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

கல்யாண்குமார். எம் பத்திரிகையாளர்  எழுத்தாளர்.

I need your support for my books னு அவர் சொன்னதால, உடனே பணம் அனுப்பி வச்சேன். அதும் 1000 அல்ல, கூரியருக்காக 50 ரூபாய் சேர்த்து 1050 அனுப்பி வச்சேன்.

சினிமா தொடர்பான புத்தகங்களில் எனக்கு ஆர்வமே கிடையாது. பணம் அனுப்பியதுக்குக் காரணம், ஆதரவு கேக்கறாரேங்கிறது ஒன்று; சினிமாப் பைத்தியம் சுரேஷ் கண்ணனுக்கு இந்தப் புத்தகங்களை அனுப்பிடலாம். அவருக்கு பயனுள்ளதா இருக்கும்கிறது இரண்டாவது காரணம்.

அவர் புத்தகம் அனுப்பறதா சொன்ன தேதி கடந்து போச்சு.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

சென்னை வர்றேன், நேர்ல சந்திக்கலாம், அப்ப புத்தகம் கையிலேயே குடுங்கன்னு கேக்கறேன்.

மனைவிக்கு உடம்பு சரியில்லே. அதனால சந்திக்க முடியாதுன்னு சொன்னார்.

நான் தில்லிக்குத் திரும்பிப் போயிட்டேன். போன பிறகு, தில்லி முகவரிக்கே புத்தகங்களை அனுப்புங்கன்னு மெசேஜ்ல சொன்னேன்.

சரி, அனுப்பிடறேன்னார்.

முகவரியே கேக்காம எப்படி அனுப்புவீங்கன்னு கேட்டேன். அனுப்பும்போது கேட்டுக்குவேன்னார். அனுப்பின காசு அம்போதான்னு அப்பவே புரிஞ்சு போச்சு.

கடைசியா 29 ஆகஸ்ட் 2022இல் ஒரு மெசேஜ் போடறேன் – ஜூலை போய் ஆகஸ்டும் போய் செப்டம்பர் முதல் வாரம் வரப்போகிறது. புத்தகம் எப்போது வரும்?

அவ்ளோதான். இன்னிக்கி வரைக்கும் பதிலே இல்லை.

இன்னிக்கி ஞாபகம் வந்து பேஸ்புக்ல தேடிப்பாத்தா, என்னை அன்பிரண்ட் செய்து வச்சிருக்கார். நல்ல மனுசன்.

அவருடைய ஐடி முதல் கமென்ட்டில்

ஆச்சா…

இந்தப் பதிவு எழுத ஆரம்பிக்கும்போது, என்னாச்சுன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.

வணக்கம் சார்.  எழுத்தும் பதிப்பும் நானே. அதனால் பல சிரமங்கள். பல தடைகள்… கடைசியாக வரும் 23 வெளியீடு திட்டமிட்டேன். நல்லி ஸ்பான்சர் திட்டம். ஆனால் அவரது உடல் நலக்குறைவு என்பதால் இன்னும் இரண்டு வாரம் தள்ளிப் போகலாம்.

அப்படீன்னு பதில் வந்திருக்கு.

2022 ஜூனிலிருந்து இன்று வரை இரண்டரை வருசம் தானாக ஒரு பதிலும் கொடுக்கலே. இப்ப கேட்டபிறகு ரெண்டு வாரத்தில் வருமாம்.

சொன்ன மாதிரி புத்தகம் போட முடியலே… சாரின்னு இந்த இரண்டரை வருசத்தில் ஒரு மெசேஜ் போட்டிருந்தாகூட இந்தப் பதிவு எழுதியிருக்க மாட்டேன்.

1000 ரூபாய் பெரிய விஷயமில்லை. ஆனா, நம்மளை எவ்வளவு கேனையா நினைச்சிருப்பாருங்கறதுதான் விஷயம்.

இது நான் ஏமாந்த கதைகளில் ஒன்று.

இப்படியே ஏமாந்த கதைகளை தொடராக எழுதலாம்னு உத்தேசம்.

 

—    எழுதியவர் – புதியவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.