ஒருதலைக் காதல் –  ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட தனியார் பள்ளி – மன உளைச்சலுக்குள்ளான மாணவி தற்கொலை முயற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

னியார் பள்ளி மாணவர் ஒருவரின்  ஒருதலைக்காதல் விவகாரத்தில் சம்பந்தபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்காமல் , மாணவி ஒருவரை  பள்ளியை விட்டு நீக்கிய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் வரை சென்றும் உரிய நடவடிக்கை எடுக்காத விரக்தியில் , மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்  யுனிவர்சல் மெட்ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நாட்றம்பள்ளியை   சேர்ந்த  பிரியா என்பவரின் மகள்  தாரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அங்குசம் இதழ்..

அதே ,பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தாரவை ஒருதலையாக காதலித்தது வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஒரு மாணவிக்காக இரு மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடித்துக்கொண்டதாகவும்; அதனால் சம்மந்தப்பட்ட மாணவி மீது சக மாணவிகள் மூன்று பேர்  தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியை பள்ளி நிர்வாகமும் இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார்  பள்ளி நிர்வாகத்திடம் பெண் பிள்ளையின் எதிர்காலம் குறித்து எடுத்து சொல்லி மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு மன்றாடியிருக்கிறார். ஆனாலும், மீண்டும் பள்ளியில் சேர்க்க மறுத்ததுடன்,  பெற்றோர்களையும் அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். இந்நிலையில், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, தன்னால் தனது பெற்றோர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டோம் என்ற மன உளைச்சலில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், மாணவி தாரா. தற்போது, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த விவகாரம் குறித்து மாணவியின் தாயாரிடம் விசாரித்தோம். “மூன்று மாதத்திற்கு முன்பு பள்ளியில் தாரா restroom சென்றபோது அவளுடன்  படிக்கும்  சக மாணவிகள்  மூன்று பேர் அடித்ததால், தலையில் காயம் ஏற்றப்பட்டது. மேலும்,  இந்த சம்பவத்தை வீட்டில் சொல்லக் கூடாது என பள்ளியின் தாளாளர் மிரட்டியுள்ளார்.

இதனால், எனது மகள் கொஞ்ச நாட்களாக சோர்வுடனும்,  மன அழுத்தத்துடனும் இருப்பதை அறிந்து  அவளிடம்  கேட்டபோதுதான் நடந்த சம்பவங்களைக் கூறி அழுதாள். இதுகுறித்து    பள்ளியின் முதல்வர் கிரிநாத்திடம் , கேட்டதற்கு ”உங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல  வேண்டிய அவசியமில்லை. உங்க மகளை பள்ளியில் சேர்க்க முடியாது. நீங்கள் மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு செல்லுங்கள்” என  கடுமையான வார்த்தைகளால் மிரட்டி வெளியேற்றி விட்டார்.

புகார் கடிதம்
புகார் கடிதம்

உடனடியாக பள்ளியின் தாளாளர் சிவப்பிரகாசம் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரமணியிடமும் முறையிட்டேன். அவர்களும் அலட்சியப்படுத்தியதால் , இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தேன்

புகார் சம்பந்தமாக  தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலரிடம் பேசுவதாக சொன்னவர், அவரும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எனது மகளை தனியாக விட்டுவிட்டு சிறப்பு மனுநீதி நாளான அக்டோபர் – 28 அன்றும் இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன்.” என்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

என்ன சொல்கிறது பள்ளி நிர்வாகம்?

பள்ளி நிர்வாகி சிவப்பிரகாசம்
பள்ளி நிர்வாகி சிவப்பிரகாசம்

யுனிவர்சல் பள்ளியின் முதல்வர்  கிரிநாத்தை தொடர்பு கொண்டோம். அழைப்பை எடுக்காததால், பள்ளியின் தாளாளர் சிவப்பிரகாசத்திடம் பேசினோம். “தற்போது சென்னையில் ட்ரைவிங்கில் உள்ளதாகவும் பின்னர் நானே அழைத்து பேசுகிறேன்” எனக் கூறியவர் மீண்டும் தொடர்பு கொண்டபோது நமது அழைப்பை எடுக்கவில்லை.

புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் பேசினோம், “புகார் குறித்து மனு அளித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றும், உடனடியாக மாவட்ட கல்வி (தனியார்) அலுவலரிடம் , விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறேன்” என்றார்.

”வரைமுறையற்ற செல்போன் பயன்பாடும் அதன்வழியே, சமூக ஊடகங்களின் தாக்கமும் பள்ளி மாணவர்களை எந்த அளவுக்கு சீரழித்திருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே எடுப்பான உதாரணமாக அமைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் – மாணவிகளை அழைத்து முறையான கவுன்சலிங் வழங்கி, அவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் படிப்பை தொடர வழிவகை செய்யாமல், போலீசார் பாணியில் அதிரடி நடவடிக்கையில் பள்ளி நிர்வாகம் இறங்கியதும் அதுவும் பாதிப்பிற்குள்ளான மாணவியை மட்டுமே குற்றஞ்சாட்டி பள்ளியிலிருந்து வெளியேற்றியிருப்பதே” இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்கிறார்கள்.

தனியார் பள்ளி
தனியார் பள்ளி

மிக முக்கியமாக, சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் சிவப்பிரகாசம் முன்னாள் அமைச்சர் வீரமணியின் பினாமி என்பதாக ஒரு பேச்சு மாவட்டத்தில் உலவி வருகிறது. இதன் காரணமாகத்தான், பள்ளி நிர்வாகத்தின் தடாலடி முடிவுக்கு எதிராக பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டு மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள்.

இன்னும் மூன்று மாதத்தில் அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், சர்ச்சையில் சிக்கிய மாணவி பொதுத்தேர்வில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வியைக் காட்டிலும் தற்போது முதலில் உடல்நலன் தேறி வருவாரா? என்பதே முதற்கேள்வியாக நிற்கிறது. பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற அணுகுமுறை, பள்ளி மாணவியின் எதிர்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டது.

– மணிகண்டன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.