”ஆலோசனை கூட்டங்களுக்கு என்னை அழைப்பதில்லை” – துணை மேயர் வேதனை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மதுரை துணை மேயர் நாகராஜன் மண்டல தலைவர்கள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் 2 கட்டமாக டைடல் பூங்கா அமைக்கப்படும்” என அறிவித்தார்.

Phase 1 டைடல் பூங்கா அமைக்க 5.60 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி வழங்கியது, தற்போது டைடல் பூங்கா நிறுவனம் Phase 1 டைடல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் கேட்டு கடிதம் அனுப்பியது, அதன் அடிப்படையில் கூடுதலாக 4 எக்கர் நிலம் என மொத்தமாக 9.60 ஏக்கர் நிலம் வழங்கி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்குசம் இதழ்..

மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில் “பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வாரி இருக்க வேண்டும் நாம் கவன குறைவாக இருந்து விட்டோம், செல்லூர் கான்மாய் நிரம்பி வழிவதை வைகை ஆற்றுக்குள் கூடுதலாக ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும், 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது்

மாநகராட்சி நிதி பற்றாக்குறை நெருக்கடி அதிகமாக உள்ளது, மாநகராட்சியில் 46 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வரி பாக்கி உள்ளது, இதில் மத்திய அரசு நிறுவனங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேலாக பாக்கி வைத்துள்ளார்கள், சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது, மாநகராட்சி வாரச் சந்தைகளால் கிடைக்கும் வருவாய் 10 இல் 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது, சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது என பேசினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

துணை மேயர் நாகராஜன்
துணை மேயர் நாகராஜன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர் ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள் இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்சினைகளை பேச முடியும்” என கூறினார்.

மதுரை மாநகராட்சி 77 வார்டு மாமன்ற உறுப்பினர் மாயத்தேவன் பேசுகையில் “பாதாள சாக்கடை அமைப்புகளை நீக்க பயன்படுத்தப்படும் சூப்பர் சக்கரா வாகனம் வி.ஐ.பி வார்டுகளுக்கு மட்டும் செல்லுமா?” என கேள்வி எழுப்பினார், இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேசுகையில் “மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் வி.ஐ.பி வார்டுகள் தான், பணிகளின் முக்கியத்துவம் கருதி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கூறுகையில் மதுரையில் உள்ள பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதினேன், கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் பொதுப்பணித்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துணை மேயர் நாகராஜன் பேட்டி
துணை மேயர் நாகராஜன் பேட்டி

பாசன கால்வாய்களை வைகை ஆற்றுடன் இணைக்க திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மழை பாதிப்புகளில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை தூர் வார வேண்டும்,  அதனை  மழை காலங்களுக்கு முன்னதாக செய்யவில்லை என்றும் , கூட்டணி என்பது வேறு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் குணம் என்பது வேறு, மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளை வசூல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், வரி வசூல் செய்வதிலும் மாநகராட்சி தொய்வாக செயல்படுகிறது, மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்து உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும் என கூறினார்.

 

 — ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.