டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா …. வரேன் ! மிரட்டினாரா எம்.எல்.ஏ ?
ஹலோ நான் எம்எல்ஏ பேசுறேன் … பழனி தானே நீ ... போன் பன்னமாட்டியாடா … நீ புடுங்குற .... காலேஜான நின்னு இருந்த உன்ன அங்கேயே இறங்கி அடிச்சிருப்பேன் ... ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வா… வரலைன்னா வேற மாதிரி போய்டுவ நீ … டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா மயிரு வரேன் .. ...
ஆபிசில் போய் உட்காருடா மயிரு திமுக எம்எல்ஏ மிரட்டல் ? திடீர் பாஜக பிரமுகர் கதறல் !
”ஹலோ நான் எம்எல்ஏ பேசுறேன் … பழனி தானே நீ … போன் பன்னமாட்டியாடா … நீ புடுங்குற …. காலேஜான நின்னு இருந்த உன்ன அங்கேயே இறங்கி அடிச்சிருப்பேன் … ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வா… வரலைன்னா வேற மாதிரி போய்டுவ நீ … டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா மயிரு வரேன் .. … ” என நீளும் அந்த உரையாடல் திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பியினுடையது.
எம்.எல்.ஏ.வின் அர்ச்சணைக்கு ஆளான, திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் பழனி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ”என் முப்பாட்டனர் திரு நாராயண சாமி கோவில் ஒன்றைக் கட்டி சில சொத்துக்களையும் எழுதிவைத்தனர். அதில் 12 ஏக்கர் நிலம். 7 கடைகள் இருக்கு. இவற்றோடு கோவிலை நிர்வாகம் செய்த என்னை அறங்காவலராக நியமிக்கச்சொல்லி திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி சிபாரிசு செய்து வேலூர் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தார். விசாரணையின் போது நான்தான் எனது பாட்டனாரின் நேரடி வாரிசு என்பதற்கான ஆவணங்களை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து அந்த ஆவணங்கள் மீது பரிசீலனை செய்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி – 13 -ஆம் தேதி என்னை அறங்காவலராக நியமித்தார்கள்.
நான் பொறுப்புக்கு வந்தபின் கோவிலுக்கு சொந்தமான கடைக்காரர்களுக்கு வாடகை கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பினேன். கடைக்காரர்கள் சிலர் எம்.எல்.ஏ நல்லதம்பியை அணுகியிருக்கிறார்கள். இதனால் கடந்த ஒரு வாரமாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டியும் அறங்காவலர் பதவியில் இருந்து ராஜினாமா கடிதம் தந்துவிட்டுப் போன்னு சொல்றார்.
மேலும், எம்.எல்.ஏ உதவியாளர் வெங்கடேசன் என்பவர், கடந்த 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு நேரடியா என்னைத் தொடர்புகொண்டு, “எம்.எல்.ஏ. ஆபீஸுக்கு வான்னு மிரட்டியது மில்லாமல் எனது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து அண்ணனை நீ சந்திக்க வேண்டும் என்றார்.
அதேபோல் எம்.எல்.ஏ நல்லதம்பியும் வேறொரு தொலைபேசியிலிருந்து அழைத்து, தகாத வார்த்தையில் திட்டினார். ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வரவில்லை என்றால் வேற மாதிரி போய்டுவ நீ , டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா மயிரு வரேன் .. னு மிரட்டினார்.
மேலும், எனக்கும் குடும்பத்தாருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு காரணம் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பிதான். நான் திமுகவில் பல ஆண்டுகளாக இருந்துவந்தேன். இவரின் நடைமுறைகள் சரியில்லாத காரணத்தால் சில நாட்களுக்கு முன்பு தான் பி.ஜே.பி.யில் இணைந்துக்கொண்டேன்.” என்பதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் பழனி.
இதுகுறித்து பழனியின் கருத்தை அறிய அவரின் கைப்பேசி எண்ணிற்கு பல முறை தொடர்பு கொண்டோம் எடுக்கவே இல்லை .
என்ன சொல்கிறார் எம்எல்ஏ?
“அந்த நபர் எங்கள் கட்சி பிரமுகர் தான். நன்கு தெரிந்தவர்தான். ஊரில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் உரிமையுடன் கேட்டேன். இப்ப யார் யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு ஏதோ ஒரு கட்சியில் இணைந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவரை மிரட்டவில்லை.” என்றார்.
”பழனியின் பங்காளிகள் சண்டையில் கோவிலை நிர்வகிப்பதில் ஆரம்பித்த பிரச்சினையில் தற்போது பழனியின் பங்காளிகளுக்கு ஆதரவாக எம்எல்ஏ செயல்படுகிறார். அதனால்தான் அறங்காவலர் பதவியை பழனியின் பங்காளிகளிடம் கொடுக்க முயல்கிறார்.” எனவும், ”திருப்பத்தூர் நகரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கியை வசூலிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் எம்எல்ஏ அப்படி பேசி இருக்கலாம்” என்பதாகவும் தெரிவிக்கிறார்கள் சில உடன் பிறப்புகள் .
”திருப்பத்தூர் திமுக கோஷ்டி பூசலுக்கு பெயர் போனது. நல்லதம்பி மீது அவ்வபோது குற்றச்சாட்டுகளை எதிர்த்தரப்பினர் கசியவிடுவது வழக்கம். அதுபோல்தான் எதிர்த்தரப்பினர் இந்த பிரச்சினையை பூதாகரமாக்கி உள்ளனர். நல்லதம்பிக்கு மந்திரி எ.வ.வேலு பக்க பலமாக இருக்கிறார். அவரை அப்பா அப்பா-னுதான் அழைப்பரார் எம்எல்ஏ. இவர் மீது ஏராளமான புகார்கள் சென்றாலும் மந்திரியின் ஆசிர்வாதம் எப்போதும் அவருக்கு உண்டு. அதனால் இந்த பிரச்சினை அவருக்கு சாதாரணம்” என்கிறார்கள், கட்சியின் உள்வட்டாரத்தில்.
கட்சியில் ஏற்கனவே கோஷ்டி பூசல் , நகரில் அடிப்படை வசதிகள் இல்லை, போக்குவரத்து நெரிசல், செயல் இழந்த நகராட்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டில் திமுக மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எம்எல்ஏ பேசிய ஆடியோவால் மக்கள் மனதில் இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாத உண்மை.
கே.எம்.ஜி.