அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க

20.10.2025   தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்.,  கும்பகோணம், மூலமாக பொதுமக்கள் எளிதாக  எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, பெரம்பலூர், துறையூர், கரூர் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -5-லும்), கும்பகோணம் ,  தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி,  மயிலாடுதுறை, திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -7-லும்), அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -8-லும்) ஆகிய  ஊர்களுக்கு 16.10.2025 அன்று 82 கூடுதல் பேருந்துகளும், 17.10.2025 அன்று 702 கூடுதல் பேருந்துகளும், 18.10.2025 அன்று 652 கூடுதல் பேருந்துகளும், 19.10.2025 அன்று 252 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும்,  திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு  16.10.2025 அன்று 150 கூடுதல் பேருந்துகளும், 17.10.2025 & 19.10.2025 ஆகிய நாட்களில் 900 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 21.10.2025, 22.10.2025, & 23.10.2025 ஆகிய 3 நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுவருகிறது.

தட விபரம்

1. சென்னை – திருச்சி

2. சென்னை – அரியலூர்

3. சென்னை – ஜெயங்கொண்டம்

4. சென்னை – கும்பகோணம்

5. சென்னை – தஞ்சாவூர்

6. சென்னை – பட்டுக்கோட்டை

7. சென்னை – புதுக்கோட்டை

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

8. சென்னை – மயிலாடுதுறை

9. சென்னை – காரைக்குடி

10. சென்னை – கரூர்

11. சென்னை – இராமநாதபுரம்

12. சென்னை – சிவகங்கை

13. சென்னை – வேளாங்கண்ணி

14. சென்னை – திருவாரூர்

15. கோயம்புத்தூர் – திருச்சி

16. திருச்சி – இராமேஸ்வரம்

17. திருச்சி – கோயம்புத்தூர்

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும்.

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android /  I  phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.