கூடலூர் நகராட்சி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பெண்களிடம் 6 கோடி ரூபாய் மோசடி !
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் நகராட்சி பகுதியில் ஏராளமான பெண்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கவும் சீட்டு பணத்தை மீட்டு தருமாறு காவல் துறையிடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக மோசடி நிகழ்வுகள் நடந்துவரும் நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பெண்களிடம் முருகன் என்பவரின் மனைவி சண்முகப்பிரியா என்ற பெண் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார்.
எனவே, கூடலூா் பகுதி பெண்கள் சண்முகப்பிரியாவிடம் தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளனா். தீபாவளிக்கு சீட்டு முடிவடைந்த நிலையில் பலமுறை சீட்டு பணம் கேட்டபோது பணத்தை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சீட்டு கட்டி ஏமாந்த பெண்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவும் இல்லை, பணத்தையும் மீட்டு தரவில்லை எனவே, தீபாவளி சீட்டு பணத்தை மீட்டு தரவும், தீபாவளி சீட்டு நடத்திய பெண் மீது நடவடிக்கை எடுக்கவும், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
— ஜெய்ஸ்ரீராம்.