தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: பால் கேக்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு பாக்க போற ரெசிபி பால் கேக் சிம்பிளா வித்தின் 15 மினிட்ஸ்ல சட்டுனு பண்ணிரலாங்க. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா 1 கப், பால் பவுடர் கால் கப், உப்பு 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன், சர்க்கரை 1 1/2 கப், ஏலக்காய் பொடி 1 ஸ்பூன், குங்குமப்பூ ஒரு சிட்டிகை, பால் தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா, பால் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து சிறிது பால் ஊற்றி பூரி மாவு போல் பிசைந்து 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். அடுத்து ஒரு வாணலியில் சர்க்கரை 1 1/2 கப் தண்ணீர் 1 கப் சேர்த்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ தூவி ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி வைக்கவும். இப்போது மூடிவைத்த மாவை பூரி போல் தேய்த்து ஒரு இன்ச் அளவு மொத்தமாக இருக்கும் படி தேய்த்து சிறுசிறு சதுரங்களாக கத்தியில் கட் செய்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்து எடுத்து அதனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விட்டு அதன் பின் சுவைத்தால் பால் கேக் அட்டகாசமாக இருக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.