உத்தரவை நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை கோபம் – அடுத்து என்ன?
நடந்து முடிந்து இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் -துணைத்தலைவர் பகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனால் கோபம் அடைந்த திமுக தலைமை அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்த அன்று மாலையே அறிக்கை ஒன்றை பிறப்பித்தது அதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தன்னை சந்திக்குமாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கிய திமுக நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மேலும் தலைமையின் கோபத்தை தணிக்கவும் நாங்கள் பல லட்சம், பல கோடி செலவு செய்து இருக்கிறோம். அதனால் Thisதான் நின்று விட்டோம் என்று மாவட்ட செயலாளர்கள் மூலமாக தலைமைக்கு தூது விட்டனர். இதனால் பலர் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்தனர். இந்த நிலையில் இன்னும் சில பகுதிகளில் சில அதிருப்தி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு திமுக தலைமை கொடுத்திருந்த நேரமும் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு துரோகம் செய்து அதிருப்தி வேட்பாளராக களமிறங்கிய நிர்வாகிகள் பட்டியலை எடுத்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது திமுகவிற்கு எதிராக செயல்பட்ட சில உள்ளடி உடன்பிறப்புகளின் பட்டியலையும் தயார் செய்து திமுக தலைமைக்கு கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்யாத திமுக நிர்வாகிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கவுன்சிலர்கள் மூலமாக கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால் கலக்கத்தில் உள்ளனர் சில நிர்வாகிகள்.