அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தி.மு.க அமைச்சருக்கு பண மாலை – . விஜய் கட்சி மாவட்ட செயலாளர் செய்த சம்பவம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தி.மு.க அமைச்சருக்கு பண மாலை – . விஜய் கட்சி மாவட்ட செயலாளர் – திருவண்ணாமலையில் த.வெ.க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட செயலாளர் !

திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில்  நேற்று (ஜூன் 8-ல்) கலந்து கொண்ட அமைச்சர் எ. வ. வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தமிழக வெற்றி கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வழக்கறிஞரமான பாரதிதாசனின் இல்ல புதுமண இல்ல விழாவில் தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு  திருவண்ணாமல எம்.பி., சி என் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பண மாலை அணிவித்து வரவேற்பு

https://www.livyashree.com/

விழாவிற்கு வந்திருந்த அமைச்சர்எ. வ. வேலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தவெக மாவட்ட செயலாளர் பாரதிதாசன், அமைச்சருக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில் நேற்று (ஜூன் 6-ல்) திருவண்ணாமலையில் நடைபெற்ற திருவண்ணாமலை தெற்கு மாவட்ட த.வெ.க.,

மா. செ. வின் விழாவிற்கு அமைச்சர்எ. வ. வேலு வந்திருந்தது அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. முன்னதாக த.வெ.க-வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்தன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க த.வெ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 வேகமாக சென்ற புஸ்ஸி என்.ஆனந்த் 

பின்னர் புதுமண இல்லத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி  அண்ணாமலையாருக்கு கற்பூரம் காண்பித்து வணங்கி, பின்னர் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு த. வெ. க கட்சிக் கொடியின் நிறத்தில் மாலை, சில்லறை நாணயங்களால் ஆன மாலை மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை அணிவித்து மரியாதை செய்தார்கள். தொடர்ந்து அவருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு அண்ணாமலையார் திருக்கோவில் சிவாச்சாரியார்களால் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்ப்பதற்காகவும் சால்வை அணிவித்து மரியாதை செய்யவும் அதிக அளவு அவர்களது கட்சித் தொண்டர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவர் விறுவிறு என்று அங்கிருந்து வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

-மகிழன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.