திமுக செய்யத் தவறிய தவறு…
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தவன் தான் மருத்துவப் படிப்புப்பயிலலாம் என்ற நிலை இருந்தது…
சூத்திரர்கள் குலத் தொழில் செய்ய வேண்டும் … பார்ப்பனன் மட்டுமே படித்து அரசு பணியாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது…
பன்னிரண்டு வயதுக்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது… பெண்கள் கல்விக் கற்கக் கூடாது… கரண்டிப் பிடிப்பவளுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நிலை இருந்தது…
இத்தனையையும் உடைத்தெறிந்தது பெரியாரியல்…
பெரியாரியலால் கல்விக் கற்று இன்று அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பணியாற்றும் அளவுக்கு நம் தமிழ் சமூகம் தலை உயர்ந்துள்ளது…
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அமெரிக்கா போன்ற நாடுகள் சென்றுப் பணியாற்றினர்…
அந்நிலையைத் தகர்த்து, மாணவர்களுக்கு வேண்டியக் கல்வியை ஊட்டி – திறனை மேம்படுத்தி – வாழ்வியலை வளம்படுத்தியது பெரியாரியல்…
பெரியாரியலால்தான் நாம் இந்த உயர் நிலைக்கு வந்தோமா என்று, இன்றையத் தலைமுறையிடம் கேட்டால் ‘ பெரியாரா?… அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?…நான் படித்தேன்… எனக்கு வேலை கிடைத்தது’ என்று சொல்கிறார்கள்…
இந்த நிலைக்கு நம் தலைவர்கள் ஆற்றியப் பணிகள் தெரியவில்லை இளம் தலைமுறையினருக்கு..
ஏனிந்த நிலை…
பெரியாரை இளம் தலைமுறையிடம் கொண்டு செல்லத் தவறி விட்டோம்…
இதில் பெரியார் இயக்கங்களைக் குறைக் கூறவியலாது…

அரசோச்சும் திமுக இந்த பணியை செய்யத் தவறிவிட்டது எனில் தவறில்லை..
ஆர் எஸ் எஸ் எப்படி அடித்தளமிட்டு சாதியும் மதமும் தளர்ந்து விடாமல் விடாப்பிடியாக வினையாற்றிக் கொண்டிருக்கிறதோ; அது போல் பணியை -பெரியாரியலை- மாணவர்களிடம் முறையாக சேர்க்கத் தவறிவிட்டது திமுக அதிகாரத்தில் இருந்தும்…
ஆட்சியைத் தக்க வைப்பதற்காக எடுக்கும் செயல்பாடுகள் போல் நம் முன்னோர் நமக்காகப் போராடிப் பெற்ற உரிமைகளை – பெரியாரியலை- மாணவர்களிடத்தில் சேர்க்க வேண்டியக் கடமை திமுகவுக்கு இருக்கிறது; ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால்…
— அரங்ககனகராசன்