அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி…  இந்த விஷயம் தெரியுமா?

0

அழகிய தமிழ் திருவளர் செல்வன், திருநிறை செல்வி…  இந்த விஷயம் தெரியுமா?

தமிழர் திருமண நிகழ்வுகளில் ஒன்று திருமண விருந்தில் அல்லது கையில் தரும் பையில் தேங்காய், பழம்/ நல்லதொரு நூலுடன், – கோவில்பட்டிக் கடலை உருண்டை போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!

4 bismi svs

இதே நுட்பம் திருமண அழைப்பிதழில்கூட உண்டு. மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’செல்வன்/செல்வி என்று போட்டால், ‘ இந்த வீட்டில் இவரின் இளையோர் -திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு’ என்று பொருள். திரு வளர வாய்ப்புள்ளது.

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால், ‘இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி. இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை’ என்று பொருள். திரு நிறைவடைந்தது! திருவளர்ச்செல்வன், திருநிறைச் செல்வி என்று பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.