கொள்கையாளர்களை வீழ்த்தி விட்டு துணை முதலமைச்சர் பதவி பெற வேண்டுமா ?
திமுக அரசில் கொள்கை ரீதியாக செயல்படும் அமைச்சர்களை ஒதுக்குவது திமுக பாஜகவை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கொள்கையாளர்களை வீழ்த்தி விட்டு துணை முதலமைச்சர் பதவி பெற வேண்டுமா ?
செந்தில் பாலாஜி அமைச்சராக்கி நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பார் அது அவமானமாக தெரியவில்லையா? என -மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி*
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் மனோதங்கராஜின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது.
மனோ தங்கராஜ் அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கப்பட்டது முற்போக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது இதற்கு திமுக தலைமை பதிலளிக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் RSS ன் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி குமரி மாடல் ஆர் எஸ் எஸ் மாடல் என்பதை மாற்றி திராவிட மாடல் என மாற்றியவர் மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகத்தை எழுதியவர் பாசிசத்திற்கு எதிராக நிற்பவர் கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர் ஆர் எஸ் எஸ் ஐ எதிர்த்தது தவறா? அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது மென்பொருள் ஏற்றுமதியை 21 சதவீதத்திற்கு மேலாக உயர்த்தியவர் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வழி வகை செய்தார் ஆவினில் ஊழலை ஒழித்தார் அது தவறா?
நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியிலும், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை பணம் கொடுக்காமல் வெற்றி பெற வைத்தவர் எது அவர் செய்த தவறு முதல்வர் எதனால் அவரை நீக்கி இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து கனிம வளம் அதானி துறைமுகத்திற்கு கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது இதனை மிக தீவிரமாக எதிர்த்து பெரும்பான்மை குவாரிகளை மூடியவர் மனோ தங்கராஜ்
கனிமவள கொள்ளைகளை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு நிறைய லாரிகள் ஓடுகிறது அந்த லாபமெல்லாம் தடைப்பட்டது ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை அவர் தடுக்கிறார் உளவுத்துறையில் உள்ள ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் பாஜகவினர் மற்றும் கனிமவள கொள்ளையர்கள் கூட்டாக இணைந்து அழுத்தம் தந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது இந்த முடிவு எதற்கு எடுக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.
இந்த முடிவு திமுக வின் பொதுச்செயலாளருக்கும் துணைப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு தெரியுமா திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திலோ உயர்மட்ட கூட்டத்திலே முடிவு எடுக்கப்பட்டதா? ஆ.ராசாவிற்கோ பொன்முடிக்கோ இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமா?
திமுகவில் கொள்கை ரீதியாக செயற்பாட்டாளர் போன்று செயல்பட்டு வந்தவரை திடீரென அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்கிறீர்கள்
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முற்போக்கு அமைப்புகள் திராவிட கட்சிகள் ஆகியோரிடம் நன்மதிப்புகளை பெற்றவர் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெற்றவர் 20 வருடமாக கன்னியாகுமரி போன்ற திமுகவிற்கு சவாலான இடங்களில் பணிபுரிந்து வந்துள்ளார் இப்போது எங்கிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு இந்த முடிவு தெரியுமா இதனை திமுக தலைமை தெரியப்படுத்த வேண்டும் ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை நம்புகிற கட்சி நீங்கள் முடிவு எப்படி எடுக்கிறீர்கள் இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் திமுகவிற்கு இருக்கிறது.
திமுகவிற்காக பல முற்போக்கு இயக்கங்கள் எல்லோரும் களத்தில் பல மாதங்கள் வேலை செய்துள்ளோம். திமுக தேர்தலில் மட்டும் வேலை செய்வார்கள் நாங்கள் 365 நாளும் வேலை செய்தோம்.
மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றின் வாக்குகளை அறுவடை செய்தது திமுக எல்லாவற்றையும் செய்துவிட்டு முற்போக்காளர்கள் விரும்பும் சில கொள்கையாளர்கள் நீக்கப்படுவது எந்தவிதமான நடைமுறை என்ன கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி கட்சிக்கு வந்தவுடன் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது நிபந்தனை ஜாமினில் தற்போது வெளியில் வந்துள்ளார் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இரண்டு நாள் கையெழுத்திட வேண்டும் தினசரி நிபந்தனை ஜாமினில் உள்ள ஒருவரை அவசர அவசரமாக அமைச்சராக அறிவிக்கிறீர்கள் ஆனால் கொள்கையாளர்களை ஆர் எஸ் எஸ் பிஜேபி எதிர்ப்பவரை சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குகிறீர்கள் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்.
செந்தில் பாலாஜி அமைச்சராக்கி நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பார் அது அவமானமாக தெரியவில்லையா
மதுரையில் பி டி ஆர் அவரை டம்மியாக்கி விட்டீர்கள் எம்பி செந்தில்குமார் கொள்கை ரீதியாக பேசி வந்தவர் அவருக்கு சீட்டே வழங்காமல் டம்மி ஆக்கி விட்டீர்கள் கொள்கை ரீதியாக செயல்பட்ட மனோ தங்கராஜ் நீக்கி விட்டீர்கள் என்ன காரணம் கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுக்கு டம்மியான பதவி கொடுத்திருக்கிறீர்கள் திமுகவில் கொள்கை ரீதியாக இருப்பவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என திமுக விரும்புகிறதா ?
வசூல் செய்து கொடுப்பவர்கள் கொள்கை இல்லாதவர்கள் ராஜ கண்ணப்பன் போன்றவர்கள் மட்டும் இருந்தால் போதும் என நினைக்கிறார்களா?
முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தது என்ன காரணத்திற்காக என பல சந்தேகங்கள் எழுகிறது?
ராஜ்நாத் சிங் வருகை கலைஞர் நாணயம் வெளியீடு கவர்னர் பதவி காலம் முடிந்த நிலையிலும் திமுக தீவிரமாக அதனை எதிர்க்கவில்லை. திமுக கவர்னர் தேநீர் விருந்துக்கு கூட்டணிகட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் சென்று பங்கேற்கிறது.
அமைச்சர் ரகுபதி இராமன் தான் திராவிட அரசியலின் முன்மாதிரி என பேசுகிறார் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை அமைச்சர் சேகர்பாபு பூணூல் போட்டுக்கொண்டு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார் இந்துத்துவ கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்.
அனைத்து ஜாதி அர்ச்சகர் என்ற ஆணையை ஒரு வருஷமாக கண்டு கொள்ளவில்லை சிதம்பரம் கோவில் பிரச்சனையை தீர்க்கவில்லை ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
சனாதனத்தை அமல்படுத்தக் கூடியவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை கொள்கை ரீதியாக நேர்மையாக செயல்படுவார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது எப்படி மக்கள் சரியாக பார்ப்பார்கள்.
மனோ தங்கராஜ் சிறுபான்மையினரின் பிரதிநிதியாக உள்ளார் நாடார் சமூகத்தை சேர்ந்தவராகவும் உள்ளார் சமூக நீதி அடிப்படையில் நாடார் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தவர்கள் சமூக நீதி பேசுபவர்கள் அந்த சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை தடுப்பது ஏன்?
திமுக அரசுக்கு சிறுபான்மையினர்கள் தேவை இல்லையா கேள்வி என கேள்வி எழுப்புவார்களா இல்லையா நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு பாஜக சீட்தரவில்லை என்கிறார்கள், ஆனால் திமுக ஒரு சிறுபான்மையினருக்கு கூட வாய்ப்புகள் வழங்கவில்லை , சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் இந்த அரசு என்னவாக நினைக்கிறது.
தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகள் கொள்கை ரீதியானவர்களை ஒதுக்குவது பாஜகவோடு திமுக நெருங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது அப்படி வரும்போது மனோ தங்கராஜ் இதற்கு இடையூறாக இருப்பார் என்பதால் அவரை நீக்கினார்களா முதல்வர் பதில் சொல்ல வேண்டும் ?
பெரியார் இருந்திருந்தால் கொள்கை ரீதியாக ஒதுக்குபவர்களை தீவிரமாக கண்டித்திருப்பார்
தமிழகத்தில் உள்ள முற்போக்கு அமைப்புகள் ஆசிரியர் வீரமணி திருமாவளவன் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகள் எல்லோரும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும் சமூக வலைதளங்களில் முற்போக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்
PTR முதல் மனோ தங்கராஜ் வரை கொள்கையாளர்களை ஒதுக்குவது என்பது திமுகவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் திமுகவின் வீழ்ச்சி என்றால் அது திராவிட கொள்கையின் வீழ்ச்சி
அந்த வீழ்ச்சியை நாம் அனுமதிக்க கூடாது இது போல் நடந்து கொள்ளும் விஷயம் எதுவும் சரியாக இல்லை
எனவே மனோ தங்கராஜ் அவர்களை தமிழக முதல்வர் திமுக தலைமை மீண்டும் பரிசீலித்து அவரை அமைச்சராக்க வேண்டும் இந்த செய்தி என்பது RSS அழுத்தத்திற்காக செய்யப்பட்டதா? கனிம வள கொள்ளையர்களுக்காக செய்யப்பட்டதா என மக்களிடம் கேள்வி செல்வது சரி கிடையாது அடுத்தவரும் தேர்தலில் மிக பெரியபாதிப்பை ஏற்படுத்தும் இதனை வேண்டுகோளாக திமுக தலைமைக்கு முன்வைக்கிறோம்
இதனை பேசியவுடன் அடுத்து அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு வைப்பார்கள்
ஏற்கனவே கனிம வள கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான லாரிகள் உரிமையாளர்கள் குவாரி உரிமையாளர்கள் அவர் மீது பொய்யான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் உளவுத்துறை துணையோடு செய்து வந்தார்கள் அதனை லிங்க் செய்து வெளியிட்டீர்கள் என்றால் அதனை நம்ப மாட்டார்கள்
திமுகவிற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி மீண்டும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மனோ தங்கராஜ் க்கு அமைச்சர் பதவி வழங்குவது திராவிட கொள்கைக்கு உகந்ததாக இருக்கும் என்பதை மக்களின் முற்போக்காளர்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்
முதல்வர் டெல்லி சென்றது உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திமுக பாஜக பக்கம் சாய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது
தமிழகத்திற்கு எதிராக என்பதால் இதனை நான் பதிவு செய்கிறேன், மனோ தங்கராஜ் பாஜக அரசை தீவிரமாக எதிர்த்தவர் அவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தது எனக்கு தெரியும் அமைச்சரை நீக்குவது என்றால் ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை இதுவரை கேள்வி எழுப்பவில்லை மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அமைச்சரை நீக்க வேண்டும் என்றால் காரணம் என்ன எந்த குற்றச்சாட்டு இருக்கிறது என கூற வேண்டும் அப்படி இல்லாமல் திடீரென நீக்குவது ஜனநாயக நடைமுறைக்கு ஒவ்வாதது
திமுக 3 வகையானவர்கள் உள்ளனர் திமுக அமைச்சரவையில் கொள்கைகளோடு குறைந்த பேரே உள்ளனர் பிழைப்புவாத அடிப்படையில் உள்ளனர் வசூல் செய்து கொடுப்போம் எலக்சன் காசு கொடுத்து ஜெயிப்போம் என நிறைய பேர் நிர்வாகிகள் உள்ளனர் அப்படி இருக்கும்போது நாளை பாஜக இதைவிட கூடுதலாக பணம் கொடுத்தால் என்ன செய்வார்கள்
தமிழகத்திலேயே PTRம், மனோ தங்கராஜ்சும் தான் காசு கொடுக்காமல் ஜெயித்தவர்கள் காசு கொடுக்காமல் ஜெயித்தவர்கள் கொள்கை ரீதியாக உள்ளவர்களை உதாசினபடுத்தினால் அந்த கட்சி நாளை எப்படி சரியாக இருக்கும்
திமுக அரசில் கொள்கை ரீதியாக செயல்படுபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தர மறுக்கப்படுகிறது
பிழைப்புவாத அடிப்படையில் உள்ளவர்கள், கொள்கை இல்லாதவர்களான செந்தில்பாலாஜி , ராஜ கண்ணப்பன் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது இது ஒரு கொள்கை சறுக்கு
திமுக கொள்கையிலிருந்து வலுவி போகிறார்கள் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும் கொள்கையில் உள்ளவர்கள் கட்சியில் இருந்தால்தான் பாஜக என்ன நெருக்கடி கொடுத்தாலும் கட்சியை தாங்கி பிடிக்க முடியும் கலைஞர்கள் காலத்திலிருந்து அப்படிதான் இருந்திருக்கிறது அதனால் தான் நாங்கள் இதனை திமுகவின் நலன் கருதி தான் இதனை கூறுகிறோம்.
கொள்கையாளர்களே முன்னிலைப்படுத்துங்கள் பி டிஆரை டம்மியாக்கிவிட்டார்கள் மதுரை அரசியலில் கூட ஒன்றும் செய்யவில்லை அவரை மாற்றினீர்கள் என காரணம் சொல்லுங்கள்
மூர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மூர்த்தி கொள்கை உடையவரா? பி டி ஆர் கொள்கை உள்ளவரா என சொல்லுங்கள் ஒரு கட்சிக்கு களத்தில் வேலை செய்பவர்களும் கொள்கையானவர்களும் வேண்டும் இருவரை ஒரே மாதிரி பார்க்க வேண்டும், ஒரு தரப்பை ஒதுக்க கூடாது ஒரு தரப்பு ஒதுக்கி விட்டு இன்னொரு தரப்புக்கு செய்தீர்கள் என்றால் நெருக்கடி வரும்போது ஓடி விடுவார்கள்
செந்தில் பாலாஜி ஆட்சி போனவுடன் ஓடி விட்டார் என்றால் என்ன ஆனால் ஆராசா கனிமொழி மனோ தங்கராஜ் பி டி ஆர் போன்றவர்கள் எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கட்சிக்காக நிற்பார்கள்.
கொள்கைதான் முக்கியம் அடிப்படை கலைஞர் அதை வைத்து தான் அரசியல் நடத்தினர் பெரியார் பாதை அண்ணா பாதை என்று சொல்கிறீர்கள் அதனால் கொள்கை ரீதியானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் திமுகவுடைய கொள்கை வழிகாட்டுதல் என்ன கொள்கையாளர்களுக்கு முக்கியத்துவம் குறைந்தால் வழி மாறுகிறது என அர்த்தம் அதனை மாற்ற வேண்டும் திருத்த வேண்டும்.
தொடர்ச்சியாக அமைச்சர் ரகுபதி ராமன் முன்மாதிரி என பேசுகிறார் திராவிட இயக்கத்திற்கு நேரெதிரான சிந்தனையுடன் பேசுகிறார் சமூக நீதிக்கு ராமன் முன்மாதிரி என பேசுகிறார் திமுகவினர் அதனை கண்டித்தனர் முத்தமிழ் முருகன் மாநாடு என போட்டுவிட்டு அவர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக மதச்சார்பின்மைக்கு எதிராக அறநிலைத்துறை கல்லூரிகளில் ஆன்மிகத்தை கொண்டு வருவேன், மத கல்வியை புகுத்துவேன் என கூறுகிறார் திமுக அதனை கண்டித்ததா? இதன் எல்லாம் கொள்கைக்கு எதிரானது தான்
திரை மறைவில் நடப்பதை பேசவில்லை வெளிப்படையாக அனைத்து சாதி அர்ச்சகர் திமுகவின் கொள்கை 100 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டார்கள் அதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்மதத்தை வளர்ப்பது தான் அரசின் வேலையா கட்சியின் வேலையா மதசார்பற்ற அரசு எந்த மதத்தையும் வளர்க்கக்கூடாது கோவிலை நிர்வாகம் செய்வது மட்டும்தான் அவர்கள் வேலை மாநாடு போட்டு மத்ததை வளர்ப்பதல்ல உங்கள் வேலை இல்லை.
இஸ்லாமியர்களுக்கு மாநாடு போட்டு அல்லாவையும் கிறிஸ்தவர்களுக்கு மாநாடு போட்டு மத்ததை வளர்ப்பீர்களா? அரசின் வேலை அதுஅல்லஅரசியல் கட்சி மத ரீதியாக செயல்படக்கூடாது என கூறியிருக்கிறதுகொள்கை ரீதியாக விலகுபவர்களை எதுவும் செய்யவில்லை கொள்கையாளர்களை ஒதுக்குவது சந்தேகத்தை கொண்டுவருகிறது அதற்கு பதில் சொல்ல வேண்டும்துணை முதல்வர் சனாதானத்தை எதிர்த்து பேசுகிறார் கொள்கையாளர் என்ற அடிப்படையில் துணை முதல்வர் ஆக்கினால் சரிதான்,
கொள்கை ரீதியாக உள்ளவர்களை வீழ்த்திட்டு துணை முதலமைச்சரை கொண்டு வரும்போது எந்த வகையான சிந்தனையை மக்கள் மத்தியில் உருவாக்கும். திமுகவில் வருத்தத்தில் ஒரு சிலர் இருப்பார்கள் இது நாகரீகமான முறையா என கேள்வி எழுந்தது.
மனோதங்கராஜ் நீக்க முடிவு எங்கு நடந்தது பொன்முடி இலாக மாற்றம் என்பது ஆளுநருக்கு பிடிக்காமல் உயர்கல்வித்துறை அமைச்சரை மாற்றியுள்ளார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
கனிமவள கொள்ளைக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அவர்களெல்லாம் சேர்ந்து குவாரி ஏலம் எடுத்தவர்கள் லாரி உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து மனோ்தங்கராஜ்க்கு எதிராக வேலை செய்தவர்கள் சேர்ந்து மனோ தங்கராஜை காலி செய்வதற்கான பெரிய அளவில் பணம் கலெக்ட் பண்ணி செய்கிறார்கள்.
திமுகவில் சிலரும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் முதல் குரலாக நான் பேசுகிறேன் அனைவரும் பேச வேண்டும் பேசினால் தான் திமுக என்ற கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்ற கோணத்தில் தான் பேசுகிறேன்.
திமுகவிற்காக தான் நாங்கள் வேலை செய்தோம் திமுக இந்தியா கூட்டணிக்காகத்தான் நாங்கள் வேலை செய்த மதவாத அரசியலை எதிர்ப்பதற்காக தான் பேசணும் ஆசிரியர் வீரமணி முற்போக்கு அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் பங்கேற்காமல் கூட எதற்காக வேலை செய்தார்கள் பாஜகவின் கொள்கையை எதிர்க்க வேண்டும் அதற்காகத்தான் ஆதரவு கொடுத்தார்கள்
எல்லோரும் பதவி கொடுத்து வேற பதவிக்காக ஆசைப்படவில்லை சொந்த கை காசை போட்டு வேலை செய்தும் பல வழக்குகளை பெற்றுள்ளோம்.
அதிமுக ஆட்சியில் போட்ட வழக்கு திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது நாங்கள் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறோம். எடப்பாடி அவர்களை விமர்சனம் செய்ததற்காக போட்ட வழக்கு இன்னும் நடைபெற்றுவருகிறது அந்த வழக்கை கூட திமுக அரசு வாபஸ் வாங்கவில்லை,
முற்போக்காளர்கள் போராட்டத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் யார் பயன்படுத்திக் கொள்வது? நாங்களா தேர்தல் நிற்கிறோம்
ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் கட்சி தான் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு பாஜகவினருக்கு சீட்டு கொடுக்கிறீர்கள் திமுகவில் கொள்கை ரீதியாக உள்ளவர்களுக்கு 10% சீட்டு வழங்கினால் என்ன இதனை எல்லாம் கேள்வி எழுப்ப வேண்டும் அப்படி கேள்வி கேட்பது தான் பெரியாரின் வழி
திமுகவில் எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. திமுக அமைச்சர்களே பதில் சொல்ல வேண்டும் பேச வேண்டும் யாரையும் கேட்காமல் முடிவெடுத்ததாக தெரியவருகிறது திமுக உயர்நிலை குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது அதில் இந்த பிரச்சனை பேசப்பட்டது என்று எங்காவது செய்தி வந்துள்ளதா அப்படி ஒன்றும் கிடையாதுதலைமை தன்னிச்சையாக முடிவெடுத்தது போல தான் தெரிகிறது அதனால் மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் உட்கட்சி ஜனநாயகம் இருந்தால் தான் காப்பாற்றப்பட முடியும் அதனை அமைச்சர்கள் செய்ய வேண்டும் என்றார்.
-ஷாகுல்