மருத்துவர் பீலா வெங்கடேசன் மரணம்!

மருத்துவர் பீலா வெங்கடேசன் இறப்பிற்கு காரணம் புற்றுநோய் என அறிந்தேன்.

புற்றுநோய் குறித்த நிறைய கள ஆய்வுகளை நாம் செய்ய வேண்டி உள்ளது. என் அம்மாவின் இறப்பு புற்றுநோயால் வந்தது.

இப்போது அப்பாவையும் புற்றுநோய் அறிகுறிகளுடன் வைத்துக்கொண்டு போராடிக்கொண்டு இருக்கிறோம் நானும் என் தம்பியும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது போல் புற்றுநோயும் வீட்டுக்கு வீடு இருப்பதுபோல் உணர்கிறேன். Survey எடுக்க வேண்டும் வீட்டுக்கு வீடு.

என்னென்ன புற்றுநோய்கள் இருக்கு என்கிற களப்பணி door to door  வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பவர்களின் தரவுகள் நமக்கு இல்லாமல் போகும். அதனால் வீட்டுக்கு வீடு போய் இந்த களப்பணியை செய்ய வேண்டும். திடீர் மாரடைப்பு குறித்த தகவலும் இதில் கேட்டரியப்பட வேண்டும்.

 

 —    அனுரத்னா, மருத்துவர்

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.