தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!
நம்ம ஊர்ல தங்கம் விற்கிற விலைக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கி போடுவதற்கு நம்ம நாய் படாதபாடு படுறோம். ஆனா இங்க உத்தரபிரதேசத்தில் நாயே தங்கம் போட்டுட்டு இருக்குது கேட்கும்போது தான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. அட ஆமாங்க உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் உள்ள காந்தி நகரில் இருக்கும் ராதாகிருஷ்ணா ஜூவல்லரியில்நகைக்கடை ஒன்றில் பாதுகாப்பு பணியில் செக்யூரிட்டிக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அங்கு ஒரு நாய்தான் கம்பீரமாக உள்ளேயும், வெளியேயும் வலம் வருகிறது.
இந்த வளர்ப்பு பாதுகாவலரை கடை உரிமையாளர் கிருபாசங்கர் ஜெய்ஸ்வால் தனது சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். மனித செக்யூரிட்டிகள் கையில் துப்பாக்கியுடன் இருப்பது வழக்கம். ஆனா டைசன் கையில் துப்பாக்கி இல்லை. மாறாக அந்த நாய் கழுத்தில் 50 தோலா எனப்படும் தங்க செயின் நாயின் கழுத்தை அலங்கரிக்கிறது. அத தங்க செயின் மதிப்பு இப்போது 50 லட்சம் இருக்கும். கடை உரிமையாளர் கிருபாசங்கர் இது குறித்து கூறுகையில், ”கடைக்கு உள்ளேயும், வெளியேயும் டைசன் தான் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறான்.
வாடிக்கையாளர் மாதிரி திருடன் வந்தால் அவர்களை கண்டுபிடித்துவிடுவான். கடையை சுற்றி திரியும் வெளியாட்களை டைசன் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பான்” என்றார். ஆனால் நாய் கழுத்தில் கிடக்கும் தங்க செயின் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
– மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.