தமிழகத்தில் ஆளுமை மிக்க ஒரே தலைவர் எடப்பாடியார் ! மருத்துவ உதவிகள் வழங்கி டாக்டர் சரவணன் பேச்சு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் திருப்பெயரில், கழக மருத்துவரணி சார்பில் காது கேளாத இளம் பெண்ணுக்கு காது கேட்கும் கருவி மற்றும் கை,கால் இழந்த நபர்களுக்கு செயற்கையான கை, கால்களை கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, அவரது திருப்பெயரில் கழக மருத்துவரணி சார்பில் கை, கால் இழந்த நபர்களுக்கு செயற்கை கை கால் மற்றும் காது கேளாத நபர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன் பெற்றவர்கள் எடப்பாடியாருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

52 ஆண்டுகால கழக வரலாற்றில் 31 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றிய ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான், இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய  முழுக்கங்களை தனது நெஞ்சில் சுமந்து,இன்றைக்கு அரை நூற்றாண்டுகளில் இந்த இயக்கத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த எடப்பாடியார் நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவார்.

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகால ஸ்டாலின் திமுக ஆட்சிகளில் மக்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதியை கூறினார்கள். அதில் 90% கூட நிறைவேற்றவில்லை. ஆனால், இன்றைக்கு கடுமையான சொத்து வரிஉயர்வு, மூன்று முறை மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு இப்படி தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததை எல்லாம் மக்களின் தலையில் சுமத்தி விட்டு, மக்களை கசக்கிப் பிழிந்து வருகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள், பாலியல் சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் நாள்தோறும் மக்களிடத்தில் தோலுரித்துகாட்டி, தனது அறிக்கை மூலம் திமுகவை எச்சரித்து வருகிறார்.

அதேபோல், மேலூர் டங்ஸ்டன் பிரச்சினைகள் கூட சட்டமன்றத்தில் ஸ்டாலின் உத்தமர் போல காட்டினார். அதையும் சட்டமன்றத்தில் ஸ்டாலின் முகத்திரை கிழித்து எரிந்து விட்டார். இன்றைக்கு தமிழகத்தில் எண்ணற்ற கட்சிகள் இருந்தாலும் தமிழகத்தில் ஆளுமைமிக்க ஒரே தலைவராக எடப்பாடியார் உள்ளார் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை எடப்பாடியார் குரல் எழுப்பினால், அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்காக சிறப்பான ஆட்சியை நடத்தியவர் எடப்பாடியார். குறிப்பாக, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 2000 அம்மா மினிகிளினிக், அம்மாவின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் உயர்த்தி ஏறத்தாழ 12.50 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர்க்கு இரு சக்கர வாகன திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் பேர் பயன்பட்டனர். குடிமாராமத்து திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் தமிழகத்தின் குடிநீர் பரப்பளவை 6 சகவீதமாக உயர்த்தினார். கொரோனா காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்காத காலத்தில் கூட தடுப்பூசி கண்டுபிடித்தால் தமிழக மக்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் முதல் முதலில் அறிவித்தவர் எடப்பாடியார். அதனை தொடர்ந்து மத்திய அரசு அதனை செயல்படுத்தியது. விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை ரத்து செய்தார். 50 ஆண்டுகால பிரச்சனையான காவிரிக்கு நிரந்தர தீர்வு கண்டு, திமுக கொண்டுவந்த மீத்தேன் திட்டத்தை தடுத்து காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடியார் அறிவித்தார்.

இதற்கெல்லாம் மேலாக திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திட்டு ரத்து செய்வோம் என்று ஸ்டாலினும் அவரது மகனும் கூறினார்கள். நான்கு ஆண்டுகள் வரப்போகிறது, சொன்ன வாக்குறுதி நிறைவேற்றவில்லை? ஆனால், எடப்பாடியார் இதற்கு மாற்றாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6,60 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

புரட்சித்தலைவர் காலத்தில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். புரட்சித்தலைவி அம்மா காலத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தனர். தற்போது எடப்பாடியார் காலத்தில் 2 கோடிக்கு மேல் தொண்டர்கள் உள்ளனர். இன்றைக்கு வடகிழக்கு பருவமழையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடியார் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை தனது பொற்கரங்களால் வழங்கினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழகத்தின் சார்பில் கழகத்தினர் வழங்கிட வேண்டும் என்று ஆணையிட்டதால், அதனை தொடர்ந்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. இன்றைக்கு இதுபோன்று எந்த பிரச்சனை என்றாலும், மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான் என்ற வரலாற்றை இன்றைக்கு எடப்பாடியார் உருவாக்கி உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சர் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

அதேபோல் ஸ்டாலினை எதிர்க்கட்சி  தலைவராக கூட வரக்கூடாது என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர். நிச்சயம் நடக்கும் ஏனென்றால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என கூறினார்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.