அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மிஷன் லைப் : சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை !

திருச்சியில் அடகு நகையை விற்க

195 உலக நாடுகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திக் கொண்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் (2015) சரத்துகளின்படி, உலக வெப்பமயமாதலை தொழில்மயமாதல் காலத்திற்கு முந்தைய உலகளாவிய சராசரி வெப்பநிலையான 2 டிகிரி செல்சியஸ் அல்லது முடிந்தவரை 1.5 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். ஆனாலும், காகிதத்தில் கையெழுத்திட்ட வேகம் செயலில் குறைவாகவே உள்ளது என்றே கூறலாம். சான்றாக, ஒவ்வொரு நாடும், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை சமர்ப்பிக்க வேண்டும். அதில் வெறும் 65 நாடுகள் மட்டுமே சமர்பித்துள்ளன. அவ்வாறு சமர்பித்தவையும்கூட எந்தளவுக்கு நடைமுறையில் செயல்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குறிதான். நாடுகளின் பங்களிப்பையும் தாண்டி, ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் தவிர்க்க முடியாதது.

பருவநிலை மாற்றம் என்பது தனிப்பட்ட விஷயம் அன்று. ஒவ்வொரு தனிநபரும் தன்னால் முடிந்த பங்கினை அளிப்பது இன்றியமையாதது ஆகும் . இதைத்தான் இந்தியா தனது மிஷன் லைப் என்ற முன்னெடுப்பின் மூலம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒன்றும் புரிந்துக்கொள்ள இயலாத அளவிற்கு பெரிய விஷயம் அல்ல. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மிஷன் லைப்சான்றாக ஒரு சிறுமியின் வாழ்க்கைமுறையை எடுத்துக்கொள்ளலாம் . காலையில் மரத்தினால் ஆன தூரிகையை பயன்படுத்துதல், நெகிழியின் பயன்பாட்டை குறைத்து தமிழகத்தின் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பின்பற்றுதல், தனது தந்தைக்கு அரசாங்கத்தின் மின்சார வாகனத் திட்டத்தை எடுத்துக் கூறி, அதனை தொடர வைத்தல் , உணவில் தானியங்களை சேர்த்துக்கொள்வது , மறுசுழற்சி மற்றும் நீர் சேகரிப்பு முறையை இணைத்துக்கொள்வது போன்றவை அடங்கும் .

நிலையான வளர்ச்சி என்பது இக்காலத்தின் தினசரி மந்திரமாக எடுத்துக்கொள்வது ஒவ்வொரு மனிதனின் இன்றியமையாத கடமையாக உள்ளது . சூடானின் வெள்ளப்பெருக்காக இருக்கட்டும் , புயல் கால்மேகியால் சிதைக்கப்பட்ட பிலிப்பின்சாக இருக்கட்டும், காட்டுத்தீயால் காரியாக்கப்பட்ட லாஸ் ஏஞ்சலெசாக இருக்கட்டும், கடல் நீர்மட்டம் உயர்வதால் பாதிக்கப்படும் பசிபிக் கடல் தீவுநாடுகளாக இருக்கட்டும், இந்த நிலை நாம் வசிக்கும் இந்தியாவை பாதிக்க வெகுகாலம் ஆகாது . இறுதியாக, நிலையான வாழ்க்கை முறையை ஒரு தனிநபர் கடைபிடிப்பது உலகின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

https://www.livyashree.com/

—   பத்மபிரியா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.