உச்சத்தில் சனி – யாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி !
உச்சத்தில் சனி – யாகத்தில் எடப்பாடி! தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் அதிமுகவும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தது தேர்தலுக்குப் பின்னரும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தியதில் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மோதல் வெளிப்பட்டுள்ளதாகவும் , ஜெயலலிதா பாணியில் எதிரிகளை வீழ்த்த பக்கத்து மாநிலத்தில் யாகங்கள் பூஜைகளில் ஈடுபட்டும் , ஸ்பெஷல் மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மோதலுக்கு காரணம் ?
ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பெருந்துறை, பவானி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக கருப்பண்ணனும் , ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு கே.வி.ராமலிங்கம் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்துக்குள் சில தொகுதிகள் திருப்பூர் மக்களவைக்குள் வருகிறது. இதனால் மாவட்ட செயலாளராக இருக்கும் தன்னிடம் வேட்பாளர் குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்று செங்கோட்டையன் எதிர்பார்த்தார். ஆனால் எடப்பாடி சீண்டவே இல்லையாம். இதனால் கடுப்பான செங்கொட்டையன் , வேட்பாளர் அறிவித்த நேரத்தில், திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கோவை மருத்துவமனையில் அட்மீட் ஆகிவிட்டாராம் பின்னர் சமரசப்படுத்தித்தான் தேர்தல் பணிகளைத் தொடங்க வைத்தனர். என்கிறார்கள்
மேலும் திருப்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்,எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினர் மற்றும் டாஸ்மாக் பாரில் வேலை செய்தவராம். இதுவும் செங்கோட்டையனி ன் அதிர்ப்த்திக்கு காரணம் எனவும் இதனால்
திருப்பூர் தொகுதிக்குள் வரும் பெருந்துறை தொகுதியில் அவர் வேலையே செய்யாமல் போக , இவரது சகாவன பெருந்துறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெயக்குமாரும் , எந்த வேலையும் செய்யவில்லையாம்.
தேர்தல் நேரத்தில் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளராக இ.எம்.ஆர்.ராஜாவை நியமித்தார் எடப்பாடி. தனது அரசியல் எதிரியான ராஜாவை எப்படி எனக்கு கீழ் உள்ள தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று கோபத்தில் ஈரோடு, திருப்பூர் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லையாம். இதனால் செங்கோட்டையனுக்கும், கருப்பண்ணனுக்கும் மோதல் உருவாகியுள்ளது. கருப்பண்ணன் எடப்பாடிக்கு நெருங்கிய உறவினர். இதனால் கருப்பண்ணன் பேச்சைக் கேட்டு, செங்கோட்டையனை எடப்பாடி ஓரங்கட்டுவதாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தங்கமணி, கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் செங்கோட்டையன்
பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதில் இருந்து இவர்கள் 3 பேருமே தனி அணியாகச் செயல்படுகிறார்களாம். இது குறித்து புகார்கள் வந்ததும், திருப்பூர் தொகுதியின் பொறுப்பாளராக வேலுமணியை எடப்பாடி நியமித்தாராம். இதனால் செங்கோட்டையன் மேலும் கோபத்தின் உச்சிக்கே சென்றதாக கூறப்படுகிறது
சமீபத்தில் முடிந்த , தேர்தல் பொறுப்பாளர்கள் மீது எடப்பாடி கோபமாக உள்ளாராம். அதிலும் செங்கோட்டையன் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளாதாக கூறப்படுகிறது ஒருபக்கம் செங்கொட்டையன் தனி அணி , மற்றோரு பக்கம் தேர்தல் முடிந்த உடன் அதிமுக தினகரன் பக்கம் வரும் என்று தேனி பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சொல்ல இதையெல்லாம் யோசித்த எடப்பாடி பழனிச்சாமி அதையெல்லாம் முறியடிக்க , யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் யாகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்
எடப்பாடி எங்கே ?
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு படை வீரர்களுடன் பயணிக்கும் எடப்பாடி எந்த ஊருக்கு சென்றாலும் அவருகளுடைனேயே செல்வார்கள் . சேலத்திற்கு வந்தால் சேலம் மாநகர ஆயுதப்படையில் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.
எங்கு சென்றாலும் அவர்களும் அவருடனே செல்வார்கள் இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி, சில இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து விட்டு சேலம் வீட்டில் ஓய்வில் இருந்தவர் திடீரென போலீஸ் பாதுகாப்பை நிறுத்தி விட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சேலம் வீட்டில் இருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையம் பூர்வீக வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றவர் காணாமல் போக அங்கிருந்து எங்கு சென்றிருப்பார் என அவரின் பாதுகாப்பு படையினர் உள்பட ரத்தத்தின் ரத்தங்கள் தேட, அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் , அவர் கேரளாவில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் எதிரிகளை வீழ்த்தவும் விடாது விரட்டும் நோய்கள் போக்கவும் தொடர் பிரச்சனைகளில் இருந்து விடுபட தேய்பிறைபஞ்சமி உடன் கூடி வந்த நாளில் நள்ளிரவு சிறப்பு யாகத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் பழனிச்சாமி கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் தற்போது அவரது ஜாதகத்தில் 6-ல் சனி அதுவும் உச்சத்தில் அமர்ந்து இருப்பதால் உங்களுக்கு யாகம் மட்டுமே பலன் என்று ஆஸ்தான ஜோதிடர்கள் சொல்ல பதறியபோன பழனிச்சாமி கேரள நம்பூதிரிகளோடு வயநாடு வாராகி பைரவர் கோவிலில் மிட்நைட்டில் யாகத்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன , மேலும் சில நோய்களுக்கு கேரளா ஃபேமஸ் ஆயூர்வேத குளியலுடன் ஸ்பெஷல் மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– கேஎம்ஜி