அண்ணாமலை பதவியில் இருந்தால்  – பிஜேபியுடன் கூட்டணி பேச்சு கிடையாது !  – எடப்பாடியின் அதிரடி பிளான் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அண்ணாமலை பதவியில் இருந்து நீக்காமல்  – பிஜேபியுடன் கூட்டணி பேச்சு கிடையாது !  – எடப்பாடியின் அதிரடி பிளான் !

அண்மையில் பாஜக தலைவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்திருந்தார். பாஜக செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு அமித்ஷா உரையாற்றினார். அப்போது,“பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றிபெறும். தென்சென்னை தொகுதியை வெல்லப் பாஜக செயல்வீரர்கள் இப்போதே பாடுபடவேண்டும். 10 அமைச்சர் மந்திரிசபையை அலங்கரிப்பார்கள். எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வருவார்” என்று உரையாற்றிப் பாஜக செயல்வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

சென்னை வந்திருந்த அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதற்கு அண்ணாமலை, அதித்ஷா எடப்பாடியை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார், நான் எடப்பாடியை தொடர்பு கொண்ட போது, அவருடைய காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதால் சந்திக்க முடியாமல் போனது என, அண்ணமாலை தன்னிலை விளக்கம் கொடுத்தார், இதனால் பாஜக ஆதரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித்ஷாவைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணியை இறுதி செய்யமுடியாமல் தோல்வி மனநிலையில் சென்னையிலிருந்து தில்லி சென்றடைந்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளோடு ஒன்றுக்குப் பேட்டி தரும்போது, “ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றார்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவின் ஜெயக்குமார் பேசும்போது, “அரசியல் கத்துக்குட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் அரசியலில் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது. எங்கள் புரட்சித் தலைவியைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். இதை எங்களால் பொறுத்துக்கொள்ளமுடியாது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அண்ணாமலை இந்தக் கருத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், பாஜக தலைமை அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக பாஜகவோடு கூட்டணி தேவையா? என்று பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்படும்” என்று கொந்தளித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணாமலை ஜெயலலிதாவை விமர்சனம் செய்தது குறித்துச் செய்தியாளர் கேட்டபோது,“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. அம்மாவின் பெருமையை உணர்ந்து அண்ணாமலை பேசியிருக்கவேண்டும். அதிமுக அண்ணாமலையின் கருத்தை ஏற்கவில்லை” என்று கட்டமாக ‘கழுதை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

கடந்த 13ஆம் நாள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டைச் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அக் கூட்டத்தில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா என்று கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குக் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தீர்மானத்தைப் படித்துக்காட்டினார். இதனைத் தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி நிலைக்குமா? முறியுமா? என்று தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது திமுகவுக்குக் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்ல; அதிமுகவுக்கும் சேர்த்துக்கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்தான் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வழக்கு தொடரப்படாமல் நிலுவையில் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு முரண்டு பிடித்தால் அதிமுக அமைச்சர் மீது வழக்கு தொடரப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாநிலங்களில் கூட்டணியைப் பாஜக உறுதி செய்து வருகின்றது. ஆந்திராவில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தெலங்கனாவில் பாஜக கூட்டணி அமைக்கச் சந்திரசேகரராவ் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. கர்நாடகத்தில் பாஜக கூட்டணி அமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாராசாமியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அண்ணாமலை, “ஜெயலலிதா மீது தான் வைத்த விமர்சனம் பொய் என்றால் என் மீது நடவடிக்கை எடுங்கள். உண்மையைத்தான் கூறினேன்” என்று ஜெயலலிதா மீது வைத்த விமர்சனத்தைத் திரும்பப்பெற மறுத்துள்ளார்.

இதனால் பாஜக – அதிமுக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுகவோடு கூட்டணி குறித்துப் பேசப் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் ரவி அவர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச இருக்கிறார் என்ற தகவல்கள் 18.06.2024ஆம் நாள் இணைய இதழ்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் 18.06.2024ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் பல்வேறு கட்சியைச் சார்ந்த 500 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது,“உள்துறை அமைச்சர் அமித்ஷா 25 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று கூறியுள்ளார்.

அப்படியானால் பாஜக தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றது என்றால் அது அந்தக் கட்சியின் விருப்பம். அது குறித்துச் சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற அதிகம் வாய்ப்பு உள்ளது. யாருடன் கூட்டணி என்பதைத் தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்” என்று பாஜகவை மறைமுகமாகச் சாடி பேசினார்.

அதிமுக தரப்பில் பேசிய முன்னணி தலைவர் ஒருவர், “எங்கள் இதயத் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இழித்தும், பழித்தும் உள்நோக்கத்தோடு கருத்துகளை வெளியிட்டுள்ள அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டுத்தான் எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.

அதைச் செய்யாமல் திமுக மிரட்டுவதுபோல் எங்களையும் மிரட்டிப் பார்க்கலாம் என்று பாஜக நினைத்தால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தனித்துப்போட்டியிட வேண்டிய நிலையே ஏற்படும். போட்டியிடும் எல்லா இடங்களிலும் குறைந்த வாக்குகளைப் பெற்று ‘டெபாசிட்’ வாங்கமுடியாத நிலைதான் ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். எங்கள் தலைமையைத்தான் பாஜக தமிழ்நாட்டில் ஏற்கவேண்டும். நாங்கள் ஒருபோதும் பாஜக தலைமையை ஏற்கமாட்டோம்.” என்று பாஜக எதிர்ப்பு மனநிலையோடு பேசினார்.

எதிர்வரும் ஜூன் 23 அகில இந்திய அளவில் பீகார் தலைநகர் பட்னாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக எதிராகக் கூட்டணியை அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதே நாளில் சென்னையில் பாஜக கூட்டணி அமைக்க அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருக்கிறார்.

மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை நீக்காமல் கூட்டணிக்கு அதிமுக ஒத்துக்கொள்ளாது என்றே அதிமுக வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. ஒருவேளை ஜூன் 23ஆம் நாள் “பாஜகவோடு கூட்டணி இல்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தால் ஜூன் 24ஆம் நாள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெறுவார். இந்திய அரசியல் வரலாற்றில் 2023 ஜூன் 23 முக்கிய இடத்தைப் பிடிக்கப்போவது என்னமோ உண்மைதான்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.