ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !
வீரபாண்டி பேரூராட்சியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியல் இன மக்கள் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு நீர்நிலை ஒடை அருகே அமைந்துள்ளது.
இந்த சுடுகாட்டில் சுற்றுச்சுவர், எரியூட்டும் கொட்டகை கட்டி முடிக்கப்பட்டு பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது பட்டியலின மக்களின் சுடுகாடு, நீரிலை ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம் கட்டும்பணி தொடங்கியுள்ளனர். இதற்கு பட்டியலின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பட்டியலின மக்களின் சுடுகாட்டில் கட்டவுள்ள மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.