அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் !

0

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தற்போது 07.02.2025 அன்று (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் LIC  நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இம்முகாமில்  கலந்து  கொள்வதற்கான  தகுதிகள்

  • கல்வித்தகுதி: SSLC, +2, AnyDegree, ITI, Diploma
  • வயதுவரம்பு: 18வயது முதல் 45வயது வரை
  • பாலினம்: பெண்கள் மட்டும்
  • மாதஊதியம்: ரூ.7000 +
  • நாள்: 07.02.2025 (வெள்ளிக்கிழமை)
  • தேவையான ஆவணங்கள் : சுயவிவர படிவம், கல்வி சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படம் மட்டும்

மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.