மலை போல் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் – தொற்று நோய் பரவும் அபாயம் !
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உரிய அனுமதி இன்றி பார் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடை அருகில் திறந்தவெளியில் குடிமகன்கள் அமர்ந்து மதுவை குடித்துவிட்டு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.
இதனால் மதுபான கடை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், கடை அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, அரசு இதுமாதிரியான சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உரிய அனுமதியின்றி செயல்படும் மதுபான கடைகளின் செயல்பாடுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
— ஜெய்ஸ்ரீராம்.