தமிழகத்தில் அடுத்தடுத்து வீசும் ஈடி அலை… தாக்கு பிடிக்குமா திமுக.!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு விசிட் அடித்து, கோடைவிழா போன்ற பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்து வருகிறார். ஒரு வாரம் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஒருபுறம் நிகழ்ச்சி, மறுபுறம் தனது உடலுக்கு சிறிது ஓய்வையும் விரும்பிதான் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றுக் காலை முதல் திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது முதல்வருக்கு தலைவலியை மேலும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் உள்வட்டம் அறிந்தவர்கள்!
சென்னையில் இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன். டாஸ்மாக் மேலாளர்கள் துரை முருகன், சங்கீதா ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் 8 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறையினர், சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரது வீடு என சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆகாக்ஷ் பாஸ்கரன் வீடு ஆகியவற்றில் சோதனை செய்து வருகின்றனர். ஆகாக்ஷ் பாஸ்கரன் என்பவர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய உறவினர் ஆவார்.

டான்பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தளபதி படத்தினில் நட்புக்கு அடையாளமாக விளங்கும் ரஜினி- மம்முட்டிக்கு அடுத்து அரசவையில் நட்புக்கு அடையாளமாக இருந்துவரும் அன்பில் மகேஷ் – உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டார்கெட் செய்து அமலாக்கத்துறை அடுத்தக்கட்ட காய் நகர்வுகளை நகர்த்திருப்பது திமுக உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
— ஜெ. ஜான் கென்னடி.