கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !
சிவகாசி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின் பகிர்மான செயற்பொறியாளர் பத்மா மீது தொடர்ந்துகொண்டிருந்த லஞ்ச குற்றச்சாட்டுகள் வந்துள்ளது, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவி வந்த ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,
இதற்கிடையில், அவரது அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்து கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி கல்லாக்கட்டுவது போல் தோன்றும் வீடியோ வெளிவந்து வைரலானது. இந்த காட்சி பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தூண்டியது.

வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மின்வாரியத்தில் உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த மின்வாரிய தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து உடனடியாக பதிலை கோரினார். பின்னர், குற்றச்சாட்டு தீவிரத்தையும், அமைப்பின் நற்பெயரை காக்க வேண்டிய தேவையையும் கருத்தில் கொண்டு, செயற்பொறியாளர் பத்மாவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை அதிரடியாக பிறப்பித்தார்.
பணியிடை நீக்கத்திற்குப் பிறகு, இதற்கு முன் சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் பொறுப்பில் இருந்த பாபநாசம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் குறைகளும் கோப்புகளும் பழைய நிலைக்கு திரும்பாமல், விரைவாக தீர்க்கப்படும் வகையில் புதிய அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.