எட்டையபுரம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகைக்கு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தேனி என தமிழகத்தின் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை (31.03.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடுரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. அதாவது பெரிய ஆடுகள் கிலோவிற்கு ஏற்ப ரூ.9000முதல் 28000 வரை விற்பனையாது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் சுமாராகத்தான் இருப்பதாகவும், ஆடுகள் வாங்குபவர்கள் விலையை குறைத்து கேட்பதாகவும், 12 ஆயிரம் ரூபாய் ஆடுகள் பத்தாயிர ரூபாய்க்கு கேட்டு வாங்கி செல்வதாகவும், ஐந்து கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
— மணிபாரதி.