பொய் செய்தி… நடிகர் விஜய்…நிர்மல் குமார் !
பொய் செய்தி… விஜய்… நிர்மல் குமார்!
2024 ஜூன் 17-ம் தேதி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், ‘’சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில், எது உண்மை? எது பொய்? என கண்டறிய கற்றுக்கொள்ளுங்க. சமூக வலைதளங்களில் வரும் அனைத்தையும் நம்ப கூடாது’’ என மாணவர்களுக்கு அறிவுரை சொன்னார்.
போலிச் செய்திகளை பரப்புபவர்; தவறான தகவலை தெரிந்தே ஷேர் செய்பவர்; அவதூறு செய்திகளை அள்ளித் தெளிப்பவர்; வெறுப்பு பேச்சுகளை விதைப்பவர்; பொய்ப் பிரச்சாரம் செய்பவர் என நிர்மல் குமாருக்கு ஏகப்பட்ட தகுதிகள் உண்டு. அவரைத்தான் தவெக ஐடி விங்க் துணைப் பொதுச் செயலாளராக நியமித்திருக்கிறார் விஜய்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தவெகாவிற்கு வந்திருக்கிறார்.
– Barakath Ali