அங்குசம் சேனலில் இணைய

நிலத்தை அபகரித்துக் கொண்ட எம்.பி. மகன் ! விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டு !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விவசாயி விற்பனை செய்த நிலத்திற்கு முழு பணத்தை தராமல் எழுதி வாங்கி அதை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மகன் நிஷாந்த் பெயரில் பவர் எழுதி வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும்; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நிதி அமைச்சர் அமித்ஷாவிடமே புகார் தெரிவித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்.

தேனி மாவட்டம் அல்லிநகர பகுதியை சேர்ந்தவர் சொக்க தேவர் மகன் குணசேகரன் இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு பிரவீனா, ஸ்வேதா இரண்டு மகள்கள் பிரசன்னா ஒரு மகன் உள்ளனா். குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில், 1.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2 ஏக்கர் நிலத்தில்   வீடு கட்டி உள்ள 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று கூறி மீதி 1ஏக்கர் 90 சென்ட் நிலத்தை ஒரு சென்ட் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் விலை பேசி சுரேஷ்குமார், ஆனந்தன், முகமது ரபிக், சிவக்குமார், முத்தையா, ஆகிய அனைவருக்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்பொழுது 1 கோடியே 70 லட்சம் ரூபாய் குணசேகரன் முன் பணம் வாங்கி விட்டார். மீதி பணம் நிலத்தை விற்ற பின்பு 1 கோடியே  85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாய் மொழியாக பேசி முடித்து விட்டனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதனை அறிந்த குணசேகரனின் சகோதரிகள் ராஜாத்தி, சரோஜா, போதுமணி, மூன்று பேரும் தங்களுக்கு சொத்தில் பங்கு வேண்டும் என தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிலத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தன்னுடைய மகன் நிஷாந்த் பெயரில் 2 ஏக்கர் பவர் எழுதி வாங்கியுள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அப்பொழுது இந்த நிலத்தை எழுதி வாங்கிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனிடம், குணசேகரன் மற்றும் செல்வி தம்பதியினர் நேரடியாக சென்று மீதி பணத்தை தாருங்கள் என கேட்டனர். அதற்கு அந்த இடத்தில் உள்ள 10 சென்ட் வீட்டை காலி செய்தால் மட்டுமே பணத்தை தர முடியும் இல்லையென்றால் பணத்தை தர முடியாது 10 சென்ட் நிலம் உனக்கு தர முடியாது, உனக்கு தெரிந்ததை பார்த்துக்கொள் என தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயி அந்த இரண்டு ஏக்கர் இடத்தில் கட்டியுள்ள வீட்டை  இடிக்க அடியாட்கள் மற்றும் ஜேசிபி எந்திரத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அனுப்பி உள்ளார். இதனால் குணசேகரன் செய்வதறியாது தவித்து வருகிறார். இது குறித்து செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உள்ளது.

 

  —   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.