பட்டாசு விபத்தில் பெற்றோர் இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசு !
பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.4.46 இலட்சம் மதிப்பிலான ஆணைகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
செப்.15 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்று வருகிறது. முதல் கட்டமாக 79 குழந்தைகளுக்கு ரூ.10.82 இலட்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 23 குழந்தைகளுக்கு ரூ.4.46 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– மாரீஸ்வரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.