இந்தியாவிலேயே முதல் பார்வையற்ற இந்திய வெளியுறவு துறை அதிகாரி !
அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..
இந்த மாணவி பீனோ சபீன் இன்று இந்தியாவிலேயே முதல் பார்வையற்ற இந்திய வெளியுறவு துறை அதிகாரி . இந்த படம் 2006-2007 ஆம் ஆண்டிற்குள் நான் சமூகநலத்துறை அமைச்சராக இருக்கும் போது எடுக்கப்பட்டது . அப்போது பள்ளி கூட மாணவியான பூனோ சபீன் அவர்கள் அமெரிக்காவில் உள்ள கருத்தரங்கத்தில் கலந்து அரசு முழு செவையும் ஏற்று கொள்ளவேண்டும் என மனு வழங்கினார்.
அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...
அப்போது அதிகாரி அதற்கான வரைமுறைகள் அரசாங்கத்தில் இல்லை என்றார். உடனடியாக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமது இன்றைய முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு , பிறகு சிறப்பு அரசாணை வழங்கப்பட்டு அன்றைய முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் காசோலை வழங்கிய மறக்கமுடியாத ஒரு தருணம் அன்று !
3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy
இன்று ஏதேச்சையாக வேறு ஒரு புகைப்படம் தேடும் போது இந்த அரிய பொக்கிஷம் கிடைத்தபோது எல்லையற்ற மனநிறைவு. அன்றைய முதல்வரும் இன்றைய முதல்வரும் என் ஆரம்ப கால அரசியல் பணிக்கு எவ்வாறு வழிகாட்டி ஊக்கம் வழங்கியது எனக்கு கிடைத்த பேறு நினைத்து கண்கள் பனித்தன!
இதுதான் திராவிட மாடல் ! ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் !